நிர்வாணமாக புகைப்படம் எடுத்தான், விடியோ எடுத்தான்.ஓடும் பேருந்துகளில்/ மின்சார இரயில்களில் ஒரு கையைத் தூக்கி மேலிருக்கும் கைப்பிடியை

0 2,460

நிர்வாணம் அது அனைவருக்குமானது

ஓடும் பேருந்துகளில்/ மின்சார இரயில்களில் ஒரு கையைத் தூக்கி மேலிருக்கும் கைப்பிடியை பிடித்திருக்கும் பெண்களின் ஒரு பக்க மார்பை இடுப்பை புகைப்படம் எடுப்பது.. குனிந்து கோலம் போடுவதை, மார்க்கெட்டில் காய்கறி வாங்குவதை, சாலையில், பஸ் நிறுத்தங்களில்..

ஷாப்பிங் மால்களில், தீம் பார்க்குகளில், விசேஷ வீடுகளில், மாடி வீட்டில் இருந்து கீழே இருக்கும் பெண்களை இப்படி அந்தப் பெண்களுக்கு தெரியாமலேயே புகைப்படம் எடுக்கும் வக்கிர புத்திக்காரர்களை பார்த்திருப்போம்.. அதெல்லாம் அந்தப் பெண்கள் துளியும் சம்பந்தப்படாத புகைப்படங்கள்..

அந்தப் படங்களும் சமூக வலைத்தளங்களில் பரப்பப் பட்டு வருகிறது.. அவர்களெல்லாம் இறந்தா போய்விட்டார்கள்.! இங்கு ஒருவனை நம்பிப் போய் திருமணம் செய்து கொள்வான என நம்பி அவனுக்காக தன்னையே கொடுக்க நினைக்கும் பெண்களே உங்கள் முடிவு வேண்டுமானால் அது அந்நேரத்து முட்டாள்தனமாக கூட இருந்து விட்டு போகட்டும்..

ஆனால் நிர்வாணமாக புகைப்படம் எடுத்தான்.. விடியோ எடுத்தான்.. எனக் கூனி குறுகாதீர்கள்.. முகத்தை மறைத்து விட்டால் உலகில் உள்ள எல்லா பெண்களுக்கும் இருப்பதே அது.. போர்னோகிராபி படங்களில் பணம் வாங்கிக் கொண்டு முகத்தைக் காட்டும் பெண்களும் இங்கு சமுதாயத்தில் எந்த ஒரு கூச்சமும் இன்றியே

நம்மோடு வாழ்கிறார்கள்.. ஓவியக் கல்லூரி மாணவர்களுக்காக நிர்வாண போஸ் கொடுக்கும் பெண்கள், பார்ட்டி வீடியோவில் மாட்டிக் கொள்ளும் சினிமா நடிகைகள் இவர்கள் யாரும் கூனிக் குறுகுவதும் இல்லை.. எத்தனையோ நடிகைகளின் ஆடை மாற்றும் விடியோக்கள்..

இன்றும் சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது.. ஆனால் அவர்கள் எல்லாம் அதில் மன உளைச்சல் அடையாமல் இன்று திருமணமாகி குழந்தைகள் பெற்று நலமாகவே வாழ்கிறார்கள்.. சமுதாயத்தின் பல நிகழ்வுகளில் அவர்களுக்கு உரிய மரியாதையும் வழங்கப்படுகிறது..

இது போல நிர்வாணமாக படம் எடுத்தான் விடியோ எடுத்தான் எனக் கூசிப்போய் நீங்கள் முடங்குவதே மிகத் தவறு.. உங்களால் அந்த கொடூர நிமிடங்களில் நாலைந்து ஆண்களை அந்நேரத்தில் சமாளிக்க முடியாமல் போகலாம் ஆனால் அங்கிருந்து மீண்டு திரும்பிய பிறகு உங்கள் நிர்வாணப் படத்தை வெளியிடுவேன் என மிரட்டினாலும் கவலைப்படாதீர்கள்..

முன்னதாகவே தைரியமாக அவர்கள் மீது புகார் அளியுங்கள்.. சமூக வலைத்தளங்களில் எல்லாம் வெளியாகிவிடுமே.. நம் மானம் போய்விடுமே.. என்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை.. அதற்கு தற்கொலையும் ஒரு தீர்வல்ல. சமூக வலைத்தளங்களில் ஒரு படம் அதிகபட்சமாக 5 நாட்கள் ஓடினாலே அது அதிசயம்.. ரெண்டு மாதம் கழித்து நீங்கள் இங்கு வந்தால் இதே கூட்டம் அப்போதைய டிரெண்டை கழுவி ஊற்றிக் கொண்டு இருக்கும்..

உங்களை திரும்பிக் கூட பார்க்காது.. துணிகள் இல்லாத உன் உடலை உலகிற்கே காட்டுவேன் என மிரட்டுபவனை எதிர்த்து துணிந்து நில்லுங்கள் பிரச்சனைகளில் சிக்குவதை விட அதைச் செய்தவனை சிக்க வையுங்கள்.. உங்கள் பிரச்சனையை தைரியமாக வீட்டில் சொல்லுங்கள்.. பெண்களின் உடல் நிர்வாணம் அழகல்ல.. உங்களின் தன்மானம் தான் பேரழகு..

கலங்காதீருங்கள் தமிழகத்தில் ஒரு சொலவடை உண்டு “நக்குற நாய்க்கு செக்கு எது சிவலிங்கம் எதுன்னு தெரியாது” சில நாய்களுக்காக எல்லாம் பயப்படாதீர்கள்.. நம்மீது காக்காய் எச்சம் இட்டால் அந்த துணியை எரித்தாவிடுகிறோம்! துவைத்து அணிந்து கொள்வதில்லையா! அதே மனநிலையில் இதை அணுகுங்கள்.!

உழைத்து மேலேறி வரும் பெண்களை உடலை படம் பிடித்து வைத்து முடக்கப் பார்ககும் எவரையும் கண்டு அஞ்சாதீர்கள் நிர்வாண விடியோ & புகைப்படம் இவைகளை பெரிதாக கருத்தில் கொள்ளாது துணிந்து நிற்பதே இந்த சமூக வலைத்தள காலத்து பெண்களின் முதல் உறுதிமொழியாக இருக்கட்டும்.! வாழ்த்துகள்

பகிர்வோம்

பதிவு: தோழர் இரா.வணன் நல்லத்தம்பி

You might also like

Leave A Reply

Your email address will not be published.