நம்மில் பலருக்கு வில்வ இலையை பற்றி தெரிந்திருக்காது.இது சிவனுக்கு படைக்க கூடிய வழிபட்டு இடங்களில் மட்டுமே நாம் பார்த்திருப்போம்.

0 840

வில்வ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…

நம்மில் பலருக்கு வில்வ இலையை பற்றி தெரிந்திருக்காது. இதற்க்கு காரணம் நாம் இதனை அதிகமாக பயன்படுத்துவதில்லை. இது சிவனுக்கு படைக்க கூடிய வழிபட்டு இடங்களில் மட்டுமே நாம் பார்த்திருப்போம்.

மற்ற நேரங்களில் நாம் இதனை பற்றி அறிந்திருக்க மாட்டோம். ஆனால் இதன் மருத்துவ குணங்கள் பற்றி தெரிதால் இதனை அனைவரும் வாங்க மறக்க மாட்டார்கள். இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது. அதனை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

நம்முடைய இயற்கையில் நமக்கு தேவையான அனைத்து மருந்துகளும் உள்ளது. ஆனால் நமக்கு தெரியாமல் இருப்பதால் தான் அதனுடைய பலன்களை நம்மால் பெற முடியாமல் போகிறது. அதில் ஒரு பகுதி தான் இந்த வில்வ இலையின் மருத்துவ குணங்கள். நம் உடலுக்கு தேவையான அனைத்து மருந்துகளும் இருக்கிறது. அதனை பற்றி இப்போது விரிவாக பார்க்கலாம்.

கோடை காலம் வந்து விட்டால் நமக்கு சரும பிரச்சனைகளோடு கண் பிரச்சனைகளும் வரும். இதற்க்கு காரணம் நம்முடைய உடல் சூடாவது தான். இதனால் நம் கண்கள் சிவத்தல், கண் அரிப்பு, கண் வலி என பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்க்கு இந்த வில்வ இல்லை ஒரு சிறந்த மருந்தாக இருக்கும். வில்வ இலையை வதக்கி சூட்டுடன் நம் கண்களுக்கு ஒத்தனம் கொடுத்து வந்தால் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

நமக்கு வயிற்று வலி ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அதில் முக்கியமாக நாம் உண்ணும் உணவால் தான் இருக்கும். மேலும் நம்முடைய வயிற்றில் உள்ள தொற்று கிருமிகளும் ஆகும். இந்த வில்வ தளிரை வதக்கி நாம் சூடாக்கி குடித்து வந்தால் நம் வயிற்றில் உள்ள நுண்ணுயிர்கள் கொல்லப்படும். இதனால் நம் வயிற்று வலி நீங்கும். மேலும் இது வயிறு தொடர்பான பல கோளாறுகளை சரி செய்ய உதவும்.

முடி உதிர்தல்:

இன்றைய காலகட்டத்தில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தான் இந்த முடி உதிர்தல். சிறு வயதிலே முடி கொட்டி விடுவதால் நமக்கு மனஅழுத்தம் மற்றும் வயதான தோற்றம் ஏற்படுகிறது. இதில் இருந்து விடுபட இந்த வில்வ இலை மிக சிறந்த மருந்தாக செயல்படும். இதற்கு வில்வ காயை எடுத்து அரைத்து அதனுடன் பால் கலந்து நம்முடைய தலைக்கு தேய்த்து கொள்ள வேண்டும். சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நமக்கு கண் எரிச்சல். மற்றும் முடி உதிர்தல் நீங்கும்.

நம்முடைய முகத்தில் உள்ள கரும்புள்ளியை நீக்க வில்வ காயை எடுத்து அதன் சதை பகுதியை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும். அதில் பால் கலந்து அந்த கலவையை முகத்தில் தடவி வந்தால் நம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.

காது வலி:

காது வலிக்கு வில்வ இலையை கசக்கி அந்த சாறை எடுத்து நம் காதுகளில் சிறு துளி விட வேண்டும். காது வலி விரைவில் நீங்கும். மேலும் இதனை செய்வதால் நமக்கு எந்த பக்க விளைவும் இருக்காது.

உடல் சோர்வு:

வில்வ இலையை கசக்கி அந்த சாறுடன் பால் அல்லது நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு நீனும். மேலும் இந்த வில்வ பழத்தின் ஓட்டை உடைத்து அதில் உள்ள சதை பகுதியை மட்டும் எடுத்து அதனுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் நீண்ட நாளாக இருக்கும் பித்தம் நீங்கும்.

மேலும் சில நன்மைகள்:

வில்வ வேரினை பொடியாக்கி அதனுடன் சிறிது நீர் சேர்த்து பத்து போட்டால் நம் தலை வலி நீங்கும்.
இதன் இலையை பொடியாக்கி ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு குடித்து வந்தால் மலசிக்கல் நீங்கும்.
வில்வ இலைக்கு சோகை நோயை நீக்கும் சக்தியும் உள்ளது.
மேலும் கை-கால் பிடிப்பு,வீக்கம், உடல் அசதி, போன்றவற்றை நீக்கவும் இந்த வில்வ இலை பயன்படுகிறது.

இதன் வேர் நோயை நீக்கி உடல் தேற்றும், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். குருதிக் கசிவை நிறுத்தும். பழம் மலமிளக்கும். நோய் நீக்கி உடல் தேற்றும். பழ ஓடு காய்ச்சல் போக்கும். தாது எரிச்சல் தணிக்கும். பிஞ்சு விந்து வெண்ணீர்க் குறைகளையும் நீக்கும். பூ மந்தத்தைப் போக்கும்.

வில்வத் தளிரை வதக்கிச் சூட்டுடன் கண் இமைகளில் ஒற்றடம் வைக்க கண் வலி, கண் சிகப்பு, அரித்தல் குணமாகும். இதன் இலை காச நோயைத் தடுக்கும். தொற்று வியாதிகளை நீக்கும். வெட்டை நோயைக் குணமாகும். வேட்டைப் புண்களை ஆற்றும். பித்தத்தைப் போக்கும். வாந்தியை நிறுத்தும். உடல் வெப்பத்தைத் தணிக்கும்.

இதன் பூ வாய் நாற்றத்தைப் போக்கும். விஷத்தை முறிக்கும். பழம் விஷ நோய்களைத் தடுக்கும் மலக்கட்டை ஒழிக்கும், நாக்கு புண்களை ஆற்றும். உடல் வலுவைக் கொடுக்கும். பட்டை வாத சுரத்தைத் தணிக்கும். முறைக் காச்சலைத் தடுக்கும். நெஞ்சு வலியைப் போக்கும்.

வாய்புண், குடல் புண் போன்ற நோய்களையும் தீர்க்க வல்லது காசநோயை குணமாக்கும். சளி, தடிமன், மூக்கடைப்பு, கண் எரிச்சல் போன்ற வற்றையும் குணமாக்கும் வில்வப் பழம்.

வில்வ மரத்தின் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் புற்று நோய் அடியோடு நிற்கும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள். வில்வப் பழமும் எள் எண்ணெயும் சேர்த்து தைலத்தை சிறிது விளக்கில் சூடாக்கி காதில் விட்டு பஞ்சால் அடைக்க வேண்டும் நாளடைவில் செவி நோய்கள் நீங்கிவிடும்.

வில்வக் காயை வெய்யிலில் நன்கு காயப்போட்டு அதை எரித்துக் கரியாக்கி இடித்து பொடிசெய்து தினம் பல் துலக்கி வந்தால் பற்களில் உண்டாகும் பல நோய்கள் போம்.

ஒருபிடி வில்வ இலையை சிறிது நீரில் ஊற வைத்திருந்து எட்டு மணி நேரம் சென்று, நீரிலுள்ள இலைகளை எடுத்து விட்டு நீரை மட்டும் அருந்தினால் தீராத வயித்து வலி தீரும், உடல் நலம் பெறும். ஒரு அவுன்ஸ் வீதம் அருந்தி வந்தால் வாத வலிகள் மேக நோய் போன்றவை குணமாகும்.

வில்வ இலையையும் பசுவின் கோமையத்தையும் சம அளவு எடுத்து ஊற வைத்து, இடித்துச் சாறு பிழிந்து வடிகட்டி தினமும் அதிகாலையில் ஒரு டம்ளர் நீர் அருந்தி வந்தால் சோகைநோய் மாறும் பாண்டு வியாதி பறந்தோடும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.