நகர மக்கள் நாட்டு நாய் வளர்ப்பதற்கு இந்த இனம் நன்றாக இருக்கும்…!

0 173

ராஜபாளையம்

தமிழகத்து நாய் இனங்களில் புகழ்வாய்ந்த இனம் என்றால் அது ராஜபாளையம் நாய்கள்தான். கடந்த தலைமுறையைச் சேர்ந்த யாரிடமும் அவர்களுக்குத் தெரிந்த நாட்டு நாய் இனங்களைப் பற்றிக் கேட்டால், நம் காதில் விழும் முதல் பெயர் ‘ராஜபாளைய’மாகத்தான் இருக்கும்.

2005-ம் ஆண்டு இந்திய அஞ்சல்தலையில் இடம்பெற்று பெருமைப்படுத்தப்பட்ட ஒரே தமிழக நாய் இனம் இதுதான். இதைச் சாத்தியப்படுத்தியதில் மூத்த சூழலியல் எழுத்தாளர் சு. தியடோர் பாஸ்கரனின் பங்கு முக்கியமானது.

வேறு எந்த நாய் இனத்தைவிடவும், ராஜபாளையம் நாய் பற்றி தமிழகம் முழுவதும் பரவலாகத் தெரிந்திருக்கிறது. அதற்கான முதன்மைக் காரணமாக இரண்டு விஷயங்கள்:

ஒன்று, அதனுடைய அழகும் கம்பீரமும். இரண்டாவது, தமிழகத்தில் முதல்முறையாகச் சந்தைப்படுத்தப்பட்ட நாய் இனம் அதுதான்

கோம்பை

இந்த நாய் இனத்தினை டெஸ்மாண்ட் மோரிஸ் எனும் விலங்கியல் நிபுணர் செங்கோட்டை நாய்கள் எனும் அழிவுற்ற நாய் இனத்தின் உறவுகளாக குறிப்பிட்டுள்ளார். செங்கோட்டை நாய்கள் என்பவை புலியையே வேட்டையாடும் வீரம் கொண்டவையாக அறியப்படுகின்றன. இரண்டு செங்கோட்டை நாய்கள் இணைந்து புலியை வென்றுவிடுமென கூறப்படுகிறது.

செங்கோட்டை நாய்களின் தூரத்து உறவினராகக் கோம்பை நாய் இனத்தைக் குறிப்பிடலாம் என்கிறார் டெஸ்மாண்ட் மோரிஸ்

கன்னி,சிப்பிபறை போன்ற இனங்கள் தோட்டத்தில் வசிப்பவர்களுக்கு ஏற்றது..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.