தென்னிந்திய ரயில்வே அதாவது தமிழக ரயில்வே பணியில் வட இந்தியர்களை அமர்தியது சரியா..?

0 297

ரயில்வே என்பது மத்திய சர்க்கார் பணி இதற்கு சமிபத்தில் திருச்சியில் உள்ள பொன்மலை பணிமனையில் அப்ரன்டிக்ஸ் வேலைக்கு ஆட்கள் தேர்வு சொய்தனர் அதாவது 1765 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 1600 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் மீதமுள்ள 165 பேர் மட்டுமே தமிழர்கள்

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் வேலை வாய்ப்பில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று குஜராத், மத்தியப்பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் தனிச் சட்டமே இயற்றி உள்ளன.

தமிழகத்தில் சுமார் 80 லட்சம் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவிக்கும் நிலையில், வெளி மாநிலங்களிலிருந்து பணியாளர்களைக் கொண்டுவந்து மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் திணிப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த தொழில்கள், வணிகம் அனைத்திலும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறக்கிறது.

சரி இதுக்கெல்லாம் என்னதான் காரணம்..?

தமிழ் நாட்டில் தொடர்ந்து அரசு பணிக்கு படித்த துறையை விட்டு பல்வேறு துறைக்கு அதாவது படித்ததிற்கு சம்மந்தமே இல்லாத துறையில் வேலை தேடுகிறார்கள்..!

தமிழக அரசு மதுக்கடைகளுக்கு காட்டும் நிர்வாக திறனை வேறு எந்த அரசு துறையிலாவது காட்டியது உண்டா..?

காசை வாங்கி வாக்களித்தவன் புலம்புகிறான் அரசியல் சரியில்லை என்று..! பார்க்கும் பொழுது வேடிக்கையாக உள்ளது வாக்களித்த நீ சரியில்லையே..!

தமிழகத்தின் வேலைவாய்ப்பு தமிழர்களுக்கே என்று ஏன் சட்டம் இயற்றவில்லை..? ஆண்ட கட்சியும் ஆளூம் கட்சியும் மௌனமாக உள்ளது..?

வாக்களிப்பவன் தவறாவனை தேர்ந்தெடுக்கும் வரை இதுபோன்ற அவலங்கள் அறங்கேறிகொண்டே இருக்கும் தமிழகத்தில்..!

சிந்தித்து எதிர்கால நலன் கருதி வாக்களிப்பீர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.