தவளை கத்தினால் மழை வருமா…? இதன் பின்னே உள்ள அறிவியல் என்ன..?

0 821

தவளை கத்தினால் மழை வருமென்று நிறைய பேர் சொல்கிறார்கள் மழை மேகம் கூடி வருவதை கண்டு மயில் தோகை விரித்து ஆடுகிறது என்றால் அதில் அர்த்தம் இருக்கிறது.

தவளை கத்துவதில் என்ன அர்த்தம் இருக்கிறது..?

இரவு நேரங்களில் சுற்றுபுறம் அமைதியாக இருக்கும் போது தவளைகள் கத்துவதை கேட்டால் ஒரு தாளவாத்திய கச்சேரியே நம்மை சுற்றி நடப்பது போல் இருக்கும்.

எந்த தவளையும் பெரும்பாலும் கத்துவது கிடையாது. பின்னர் எப்படி அந்த சத்தம் வருகிறது என நீங்கள் கேட்கலாம்.

தவளை ஒலி எழுப்பும் போது அதன் வாயிக்கு கீழ் பகுதியில் பலூன் போன்ற ஒரு தசை விரிந்து சுருங்குவதை பார்த்திருப்பீர்கள்.

தவளை நுரையீரலில் இருந்து காற்றை வெளியிடும். அதன் தொண்டையிலுள்ள சில நாளங்கள் அதிர்வடைகின்றன. அதனால் சத்தம் வருகிறது.

உண்மையில் தவளைகள் குறிப்பிட்ட நாளில் சத்தமாக மூச்சு விடுகிறது என்றே இதை சொல்ல வேண்டும்.காரணம் தவளைகள மழை நாட்களில் மட்டுமே இனப்பெருக்கம் செய்யமுடியும்…!

இனப்பெருக்கத்திற்கு தயாரான தவளைகள் மழைக்காக காத்திருக்கும் மழை பருவம் தவறும் போது இனப்பெருக்கம் செய்யமுடியாமல் சில தவளைகள் இறக்க நேரிடும் அப்போது தவளைகள் கத்துவதை தான் மழைக்காக கத்துகிறது என்றாரகள்..!

நாளையடைவில் தவளை கத்தினால் மழைவரும் என்று மக்களின் அறியாமையால் நம்பபடுகிறது…!

பாம்பு வாயில் அகப்பட்ட போதும் மூச்சு விட திணறுவதனால் தான் தவளையிடம் இருந்து சத்தம் வருகிறது.

இந்த சத்தத்திற்கும் இணை தேடும் சத்தத்திற்கும் பல வேறுபாடு உண்டு.

அதுதான் பய மூச்சிக்கும், காதல் மூச்சிக்கும் உள்ள வித்தியாசம்.

சில அறிவாளிகள் மழைக்கும் தவளைக்கும் சம்மந்தம் இல்லை என்று கூறுவார்கள்…!

ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமனம் எப்படி நிச்சயக்கப்டுகிறதோ அதே போல தான் தவளைக்கும் மழைக்கும் உண்டான பந்தம்..!

இதே நிலைதான் ஓணானிற்கும் மழைகாளத்தில் தான் ஓணாங்களும் இனப்பெருக்கம் செய்யும்..! இதை பலரும் கண்கூடாகவே பார்த்திருப்பீர்கள் காரணம் தெரியாமல் கடந்து சென்றிருப்பீர்கள்…!

கிராமபுறங்களில் நீங்கள் சாலைகளில் மழைகலங்களில் பயனம் செய்யும் போது தவளை, ஓணான்ங்கள் சாலையில் அடிப்படட்டு கிடப்பதை பார்த்திருப்பீர்கள் அதன் காரணம் இதுதான் தன் துணையை தேடி அலையும், விளையாடும்..!

நமக்கு மட்டும் மழை அவசியுமல்ல இவ்வுலகிற்கே மழை அவசியம் சில உயிர்கள் அதை கேட்டு வெளிப்படுத்தும்…!

இதுவே தவளை சத்ததின் பின்னனி..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.