சேலை அணிந்தால், காற்றில் பறந்த மாராப்பினால்இடை தெரிந்து தான் உணர்ச்சியை தூண்டியது என்பாய்..!

0 12,418

சேலை அணிந்தால்,
காற்றில் பறந்த மாராப்பினால்இடை தெரிந்து தான்
உணர்ச்சியை தூண்டியது என்பாய்..!

பேன்ட் சட்டை அணிந்தால்,
உடலோடு ஒட்டிய ஆடை தான்
உணர்ச்சியை தூண்டியது என்பாய்..!

பாவாடை சட்டை அணிந்தால்,
கென்டைக்கால் தெரிந்தது தான்
உணர்ச்சியை தூண்டியது என்பாய்..!

முழுதாய் முக்காடிட்டால்,
கை விரலும் ,கால் விரலும் தெரிந்து தான்
உணர்ச்சியை தூண்டியது என்பாய்..!

பழங்காலம் போல் அடுப்படியிலேயே, பெண்ணை விட்டு வைத்தாலும்,
“பெண் என்பவளையே நான் பார்த்ததே இல்லை”, அது தான்
என் உணர்ச்சியை தூண்டியது என்பாயோ ..?

உணர்வு தூண்டல்
உடை எம் தவறு எனில்
மன்னிப்பு கோருவேன்..!

வணங்கும் உடை ஒன்று சொல்…?
நான் தரிக்கிறேன்..!
அதை மீறி என்னை தப்பாக அர்த்தம் கொண்டால்,
என் தோல் உரிக்கிறேன் ..!

உணர்வுகளின் தூண்டல்
மனித இயல்பு
மறுக்கவில்லை நான் ..!

மனசு ஒன்று எனக்கும் உண்டு..!
மறுப்பாயா நீ..?

என் செய்தால்,
உன்னை ஈன்றவளுக்கு ஈடாய்
பெண்ணை பார்ப்பாய் ஆண் மகனே..?

பதிவு: ந. சண்முகசூரியன்

இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
+91 9344465679,

You might also like

Leave A Reply

Your email address will not be published.