செம்பு பாத்திரத்தின் அற்புதப் பயன்களை அறிந்துக் கொள்ளுங்கள்..!

0 395

நம் முன்னோர்கள் பின்பற்றிய பழக்க வழக்கங்களில் நிறைய அர்த்தங்களும் அறிவியலும் ஆரோக்கியமும் நிறைந்து உள்ளது. அதில் ஒன்று தான் செம்பு பத்திரத்தில் தண்ணீர் பருகுவது.

இந்த செம்பு பாத்திரத்தில் தண்ணீர் பருகுவதால் நம் உடலுக்கு நிறைய பயன்கள் கிடைப்பதாக சமீபத்திய ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

செம்பு பாத்திரத்தின் பயன்களை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்..!

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைப்பதால் அத்தண்ணீரில் இருக்கும் கிருமிகள் அழிகின்றன. முக்கியமாக பல நோய்களை ஏற்படுத்தும் இகோலி பாக்டீரியா முற்றிலும் அழிகிறது. மேலும் தைராய்டு பிரச்சனைகளுக்கு செம்பு சத்து குறைபாடு ஒரு காரணமாக கூறப்படுகிறது ஆகையால் உணவு உண்ணும் முன் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் அறுந்துவதால் இப்பிரச்சனை சரி ஆகிறது.

மூடுவலி, எலும்பு பிரச்சனைகளுக்கு செம்பு தண்ணீர் தீர்வாக உள்ளது . மேலும் இது ரத்தசோகை எனும் அணிமியாவை முற்றிலும் தடுக்கிறது மற்றும் ஹீமோகுளோபின் எண்ணிக்கை முற்றிலும் அதிகரிக்கிறது.

செம்பு மிக வேகமான காய நிவாரணி என்று சொல்லலாம். நம் உடலில் ஏற்படும் காயங்களை விரைவில் குணமடையச் செய்ய செம்பு தண்ணீர் உதவுகிறது.

தற்போது பிறக்கும் குழந்தைகள் வயதிற்கு மீறிய மூளையின் தீவிர செயல் தூண்டலால் பாதிக்கப்படுகின்றனர். அப்படிப்பட்ட குழந்தைகள் மிகுந்த சுட்டிதனத்துடன், சொல் பேச்சு கேளாமல், படிப்பில் கவனம் இல்லாமல் இருப்பார்கள். இப்படிப்பட்ட குழந்தைகள் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் மூளைக்கு தேவையான செம்பு சத்து பெற்று சரி ஆகின்றனர்.

புற்றுநோய்க்கு ஒரு சரியான மருந்து செம்பு தண்ணீர். இத்தண்ணீர் புற்றுநோய்க்கான வைரஸ்களை கொல்கிறது. புற்றுநோய் கட்டிகளும் சிறுது சிறிதாய் கரைகிறது. மேலும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் வெள்ளை அணுக்களை அதிகம் உற்பத்தி செய்கிறது.

செம்பு தண்ணீரில் அதிக அளவு அன்டி ஆக் ஷிடென்ட் இருப்பதால் நமது உடலில் எளிதில் தோல் சுருங்காமலும், கண்ணில் கருவளையம் வராமல் இளமையாக இருக்க உதவுகிறது.

கர்ப்பணிப் பெண்கள் அதிக அளவு செம்பு தண்ணீர் குடித்தால் ரத்த சிவப்பனு அதிகரிக்கிறது. இதனால் குழந்தை ஆரோக்கியமாக பிறக்க உதவுகிறது. மேலும் கர்ப்பகாலத்தில் ஏற்படும் அஜீரண கோளாறுகளுக்கும் இத்தண்ணீர் ஒரு தீர்வாக அமைகிறது.

பின்பற்றுங்கள்..! பயன் பெறுங்கள்..!

வாழ்க, நலமுடன்..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.