சீனாக்காரனை பார்த்து பயப்படுகிறோமே? ஏன் அவன் நாட்டில் செய்துள்ள அதிசியங்களை நாமும் செய்ய மறந்து விடுகிறோம்?

0 420

அரசாங்கம் மக்களிடம் ஓட்டு கேட்க வரும்போது மட்டும் பவ்யமாக, பிறகு நாம் ஒரு வேலைக்காக தேடிச் சென்றால் ( காவல்,நீதி,அரசு சான்றிதல்,..) அதன் முகம் கோரமாக, நம்மை பஞ்சை பரதேசி கணக்காக பார்க்கிறது. இதனை முதலில் மாற்றவேண்டும்.

சீனாக்காரனை பார்த்து பயப்படுகிறோமே? ஏன் அவன் நாட்டில் செய்துள்ள அதிசியங்களை நாமும் செய்ய மறந்து விடுகிறோம்?அதை விடுங்கள்,
சென்னையில் கால்வாசி இருக்கும் சிங்கப்பூர் செய்துள்ள சாதனைகளும் , அதன் வருமானமும் கொஞ்சமா என்ன? சிங்கப்பூர் அரசாங்கம் (கம்பெனி அல்ல) நம் நாட்டில் முதலீடு செய்கிறது. ஏன் நம்மால் நம் நாட்டில் செய்ய முடியாது? பொதுத்துறை என்ற பெயரில் அரசு அதிகாரிகளும்,பொதுத்துறை அதிகாரிகளும் செய்யும் கூத்து, பாவம் அப்பாவி ஏழை மக்களுக்கு எங்கே தெரியப்போகிறது. யாருக்கும் சொந்தமில்லாத கம்பெனி்இல அடித்தது வரை லாபம் என பகல் கொள்ளைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

சிங்கப்பூரில் நடப்பது நேர்மையான ஆட்சி, மீட்டர்க்கு மேலே ஓட்டுனர் காசு வாங்கிய குற்றத்தை நிருபிக்க வெளிநாட்டு சுற்றுலா பயணியை இலவசமாக வரவழைத்து சாட்சி சொல்ல வைத்து அதன் களங்கத்தை துடைத்த நாடு . நாம் பீரங்கி ஊழல் முதல், பல ஊழல்களை மென்று முழுங்கிஏப்பம் விட்டு அதிலே வளர்ந்து இப்போது வாக்காளர்களுக்கே வெளிப்படையாக லஞ்சம் கொடுக்கும் வரை வளர்ந்தாயிற்று.

இங்கு ஒன்றுக்கும், பத்துக்கும் நாட்டின் வளங்களை(ரோடுகள், அலைக்கற்றைகள், கனிம வளங்கள்,…) அடிமாட்டு விலைக்கு தனியாருக்கு விற்கும் அரசியல்வாதிகளின் ஆட்சி. அவர்களை ஆட்சியில் அமர்த்திய நம் ஆட்சி.

கரும்பிலிருந்து எத்தனால் உற்பத்தி செய்தால் பிரேசில் போல நாமும் பெருமளவு அந்நிய செலாவணியை குறைக்கலாம், ஆனால் நேர்மாறாக கரும்பை விவசாயிகள் பயிரிட நினைக்க கூடாத அளவுக்கு அதன் விலையை குறைத்தது யார்?(எத்தனாலை அரசு நல்ல விலை கொடுத்து வாங்கினால் கரும்பின் விலை ஏறும், ஏன் அதனை செய்யவில்லை?)

நம் நாட்டை ஒழுங்காக ஆட்சி செய்தாலே போதும், நாம் வளர்ந்த நாடுகளில் மேலான ஒன்றாகி விடலாம்.

எளியவனாக இருந்தால் பயந்து பயந்துதான் இருக்கவேண்டி வரும், நாம் பலமாக இருந்தால் நம் சொல்லுக்கு ஒரு மரியாதை இருக்கும். எல்லாருக்கும் ஆமாம் சாமி போடுவதை நிறுத்திவிட்டு, தைரியமான முடிவுகளை எடுத்து நாட்டை வலிமை மிக்கதாக ஆக்க நாம் முன்வர வேண்டும்.

அரசை முற்றிலும் கணினி மயமாக்குதல்,
விவசாயிகளிடம் நேரடி தொடர்பு (மானியம், பயிர் காப்பீடு, புள்ளிவிவரம் சேகரிப்பு, …) இவற்றை கணினி மயமாக்கப்பட்ட வங்கி கணக்குகள், தொலை பேசிஎண் மூலம், இணைத்து விவசாயிகளிடம் அரசு செல்லவேண்டும், அவர்களை அங்கும் இங்கும் அலைய விடக்கூடாது.

  1. சட்ட துறை சீர்திருத்தம்,
  2. காவல் துறை சீர்திருத்தம்,
  3. மக்கள் கேட்காமலேயே அனைத்து (RTI)தகவல்களையும் வெளியிடுதல்

என அரசு மக்களுக்கான இயந்திரம் என்பதை நடப்பில் காண்பிக்கவேண்டும்.

பிறகு பாருங்கள் நாம் செல்லும் பாதையை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.