சிவகங்கைல உண்மையாகவே 1000 ஜன்னல் வீடு இருக்குதா..? புகைப்படம் இதோ..!

0 852

ஆயிரம் ஜன்னல் வீடு, காரைக்குடியின் பிரபலமான அடையாளமாக விளங்குகிறது. இதன் பெயரை அப்படியே அர்த்தப்படுத்திப் பார்த்தால், “ஆயிரம் ஜன்னல்களை உடைய வீடு” என்ற அர்த்தத்தில் வரும்.ஆனால் அங்கு 1000 ஜன்னல்கள் கிடையாது

இவ்வீடு, காரைக்குடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடையே, இதனை குறிப்பாகப் பார்க்க விரும்பும் அளவுக்கு மிகவும் பிரபலமாக உள்ளது. இந்நகருக்கு நீங்கள் வந்து, இவ்வீட்டைப் பார்க்க விரும்பினால், வழியில் பார்க்கும் யாரைக் கேட்டாலும் வழி சொல்வார்கள்.

சுமார் 20,000 சதுர அடியில் மிக விசாலமாக அமைந்துள்ள இவ்வீடு, 1941-ம் வருடம், சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு கட்டப்பட்டுள்ளது. அந்தக் காலத்தில் மிக அதிகத் தொகையாக தோன்றிய இது, தற்போது சாதாரணமாகத் தோன்றுகிறது.

இவ்வீட்டில், 25 பெரிய அறைகளும், ஐந்து பெரிய கூடங்களும் உள்ளன. மேலும், சுமார் 20 கதவுகளும், 100 ஜன்ன்ல்களும் உள்ளன.

முதன்முறையாக, இவ்வீட்டில் நுழையும் யார்க்கும், என்ன தான் அது சிதைவுக்குள்ளாகி இருந்தாலும், மோசமாக பராமரிக்கப்பட்டிருந்தாலும், அதன் அசல் கட்டுமானக் கலையழகும், பிரம்மாண்டமும் தான் முதலில் கண்ணைக் கவர்ந்து பிரம்மிக்க வைக்கும்.

பகிருங்கள் பலரும் இந்த உண்மையை தெரிந்து கொள்ளட்டும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.