சில மிகச்சிறந்த வாழ்க்கை குறிப்புகள் இவை..!வாழ்க்கையின் எந்த ஒரு உயரிய நிலைக்கு சென்றாலும் எங்கிருந்து நீங்கள் புறப்பட்டீர்கள் என்பதை மறக்காதீர்கள்

0 293

முடியாது “ அல்லது “வேணாம்” என்று ஒருவரிடம் சொல்ல தயங்க வேண்டாம் அப்படி சொல்வதினால் ஏற்படும் சங்கடத்தை மனதில் இருந்து விலக்கி தள்ளுங்கள்

பல பேர் உங்களிடம் சொல்வார்கள் பலவகைப்பட்ட தொழில்களைப்பற்றி இந்த தொழில் பண்ணினா நல்லாயிருக்கும், அந்த வேலைக்கு போனா நெறைய காசு சம்பாரிக்கலாம் என்று ஆனால், உங்களுக்கு அதில் விருப்பமோ ?, சந்தோசமோ ? இல்லையென்றால் அவர்கள் சொல்வதில் ஒரு அர்த்தமும் இல்லை உங்களுக்கு பிடித்தவற்றை நீங்கள் தொடர்வது தான் உங்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கும்

வாழ்க்கையில் எதற்க்காகவும் பயப்படாதீர்கள் , மரணத்திற்க்கு கூட. உங்களுடன் அமர்ந்து உரையாடும் 50 வயது ,60 வயது , அல்ல்து 70 வயது மனிதர்களின் வார்த்தைகளின் மத்தியில் நீங்கள் அடிக்கடி இதை கேட்க கூடும் “நான் ஒரு விசயத்தை அப்ப செய்ய ஆசைப்பட்டேன் ,ஆனா அது முடியாம போயிருச்சு “ என்று ஆதங்கப்படுவார்கள் . அது மாதிரியான வார்த்தைகளை உங்கள் வாழ்க்கையில் பயன் படுத்தாமல் இருக்க வேண்டுமென்றால் .உங்களுக்கு பிடித்ததை துணிந்து செய்யுங்கள் .

உங்கள் கோட்பாடுகளுக்கும் மற்றும் வாழ்க்கை முறைக்கும் சேர்ந்து வராத நபர்களிடம் பழக நேர்ந்தாலும் அவர்களுடைய உறவை வெட்டிக்கொள்ள வேண்டாம் ஏனெனில் அவர்களும் நமக்கு ஒருநாள் வேண்டும் தான் .இந்த உலகம் வேடிக்கையானது மட்டுமல்ல சிறியதும் கூட .!

மற்றவருடன் பேசும்போது அதிகமாய் கூர்ந்து கவனிப்பதின் அருமையை உங்கள் வாழ்க்கையின் ஏதாவது ஒரு தருணத்தில் ஆச்சர்யமாய் உணர்வீர்கள். அது உங்கள் பொது வாழ்க்கையில் மட்டுமல்ல தனிப்பட்ட வாழ்க்கையிலும் கூடதான்

இந்த நாளுக்கான வாழ்க்கையை வாழுங்கள்.உங்கள் கவலைகள் மாறிக்கொண்டேதான் இருக்கும் நேற்றைய கவலை இன்று இருக்காது இன்றைய கவலை அடுத்த வாரம் இருக்காது .

உங்கள் பெற்றோரிடம் மரியாதையோடும் பணிவோடும் நடந்து கொள்ளுங்கள்.அவர்கள் இல்லாத பொது ஏற்படும் வலி உங்களுக்கு அவர்களின் அருமையை புரிய வைக்கும்

உங்களால் முடிந்த வரை நல்ல உணவுகளை எடுத்து கொள்ளுங்கள் ஏனெனில் வாய் மற்றும் நாக்கும் எதை வேண்டுமேனாலும் நல்ல உணவேன்று சொல்லலாம் ஆனால் வயிற்றுக்கு ஒன்றும் தெரியாது பாவம்

எதற்க்காக சேமிக்க வேண்டும் ? தேவையேயில்லை ஆனாலும் ….. சேமியுங்கள் .நிச்சயமாக உங்களுக்கு தேவைப்படும்

எப்பொழுதும் விழிப்போடு உங்கள் வாய்ப்புக்காக காத்திருங்கள் .கூச்சப்பட்டுக்கொண்டு தொலைத்து விடாதீர்கள்

மற்றவர்களின் மீது பழி சொல்லாமல் வாழ பழகிக்கொள்ளுங்கள் . வாழ்க்கை என்பது முழுவதுமாக நீங்கள் அதை எந்த கோணத்தில் பார்க்கிறீர்கள் என்பதை பொறுத்து உள்ளதே நடப்பதிற்கெல்லாம் மற்றவர்கள் மட்டும் பொறுப்பாக மாட்டார்கள் உங்கள் பங்கும் அதில் உள்ளது என்பதனை உணருங்கள்

மற்றவர்கள் செய்கிறார்களே என்று நீங்கள் ஒரு காரியத்திற்க்காக ரொம்ப மெனக்கெடாதீர்கள். உங்களால் முடியாவிட்டாலும் பரவாயில்லை .ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை உண்டென்பதை மறக்காதீர்கள்

நீங்கள் கற்றுக்கொண்டவற்றை மற்றவருக்கு கற்றுக்கொடுங்கள் .மக்கள் கற்றுக்கொள்வதை அதிகமாய் விரும்புவார்கள் .அது உங்களுக்கு இன்னும் அதிகமான மற்றும் ஆழமான அறிவை கொடுக்கும்

வாழ்க்கையின் எந்த ஒரு உயரிய நிலைக்கு சென்றாலும் எங்கிருந்து நீங்கள் புறப்பட்டீர்கள் என்பதை மறக்காதீர்கள்

தினமும் காலை எழுந்தவுடன்”நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” , “நான் ஒரு அற்புதமானவன்“,நான் நன்றியுணர்வுடன் இருக்கிறேன்” என்று நீங்கள் உங்களுக்கே கூறி உங்கள் மனதை பழக்குங்கள்

பிடித்திருந்தால் பகிருங்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.