சர்க்கரை எப்படி தயாரிக்கிறாங்கன்னு தெரியுமா..? ஏன் சர்க்கரை விசம் என்கிறார்கள் தெரியுமா..?

0 305

சர்க்கரை தயாரிக்கும் முறையை பார்ப்போம். சர்க்கரை, கரும்பு அல்லது பீட்ரூட் சாற்றிலிருந்து பெறப்படுகிறது.

கரும்பிலிருந்து பிழிந்தெடுக்கப்படும் சாறு கொதிக்க வைக்கப்பட்டு, அதிலுள்ள மாசுக்களையும், மொலசஸ் எனப்படும் உடன் விளைபொருளையும் நீக்க பல்வேறு வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. அவ்வேதிபொருட்களையும் அதன் தீங்குகளையும் கீழே காணலாம்.

கந்தக ஈராக்ஸைடு: இது சர்க்கரையை வெளுக்க பயன்படுத்தப்படுகிறது. இது காற்றை மாசுபடுத்தும் வாயு. இது வளிமண்டலத்திலுள்ள ஆக்சிஜன், நீருடன் இணைந்து கந்தக அமிலத்தைத் தருவதால் இது அமில மழையை உருவாக்கும். இது சுவாசக்கோளாறுகளை ஏற்படுத்தும் வாயு.

பாஸ்பாரிக் அமிலம்: இது சர்க்கரையிலுள்ள மாசுக்களை அகற்ற சேர்க்கப்படுகிறது. இது பற்களை அரிக்கக் கூடியது. தோல் அரிப்பு, சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்த வல்லது.

கால்சியம் ஹைட்ராக்சைடு (நீரேற்றப்பட்டது): சர்க்கரையை சுத்தப்படுத்த சேர்க்கப்படும் இந்த வெண்ணிற தூள், கடும் உடல்நல சிக்கல்களை ஏற்படுத்தக் கூடியது.இது குறிப்பிட்ட அளவை விட அதிகமாக உட்கொள்ளப்படும் போது பார்வை இழப்பு, கடும் தொண்டை வலி, கடும் தோல் அரிப்பு, வாந்தி, உறுப்புகள் செயலிழத்தல், திசுக்கள் அழிதல், குறைந்த இரத்த அழுத்தம், மூச்சு விட சிரமம் ஆகியவை ஏற்படக்கூடும்.

இது தவிர , தற்கால சுத்திகரிப்பு முறைகளில் பாலி அக்ரைல் அமைடுகள் சேர்க்கப்படுகின்றன. இவை ஆண்களின் பாலின உறுப்புகளை சேதமுறச் செய்யும். கூடவே, மேற்குறிப்பிட்ட உடல் நலகுறைபாடுகளையும் விளைவிக்கும்.

வெல்லம் தயாரிக்கப்படுதலில், நரி வெண்டை எனப்படும் ஒரு காட்டு வெண்டைக்காயின் சாறு சேர்க்கப்படுகிறது.

அடர் பிசுபிசுப்பான திரவமானஇது, கரும்பு சாற்றிலுள்ள மாசுக்களை அகற்றுகிறது. மேலும், விளக்கெண்ணெய் பயன் படுத்தப்படுகிறது. இது தவிர, சோடியம் ஹைட்ரோ சல்பைட், சோடியம் ஃபார்மால்டிஹைடு சல்பாக்ஸிலேட் என்ற வேதிப்பொருட்களும் சேர்க்கப்படுகின்றன.

இவை பெரிய உடல் நல சிக்கல்களை ஏற்படுத்தாத வேதி பொருட்களாய் இருப்பதுடன், அவை பயன்படுத்தப்படும் அளவும் மிகக்குறைவானதேயாகும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.