கொஞ்சம் பச்சை பச்சையா தான் எழுத போறேன் படிக்க சகிக்காதவர்கள், தயவு செய்து பொங்க வேண்டாம்..!

0 8,662

பாலியல் தொல்லைகளை பெண்கள் சந்திக்கும் போதெல்லாம் பலரும் இதனை சொல்வதுண்டு அந்த மிருகங்களை கட்டி வைத்து அடிக்க வேண்டும்..!மிருகத்திற்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்று..!

உண்மையாவே உங்களுக்கு தெரியுமான்னு தெரியல எந்த ஒரு மிருகமும் தன் ஆண் சுகத்திற்காக கட்டாய கற்பழிப்பு நடத்துவதில்லை..! இனப்பெருக்கத்திற்கு ஏற்ற நேரம் வரும் போது மட்டும் ஊடல் புரிகிறது..!

காமத்திற்கு இந்த சமூகம் மிருகத்தை ஒப்பீடு செய்வதை விட கேவலமான செயல் ஒன்றும் இல்லை..!

எந்த மிருகமும் பிறந்த குட்டியை கற்பழிப்பது இல்லை..! ஆனால் மனிதன் சந்து கிடைத்தால் சொருக நினைக்கும் ஒரு கேவல பிறப்பு என்பதில் ஐயமில்லை..!

உடனே ஆண் இனத்த கேவலபடித்திட்டான்னு ஒரு கூட்டமும், பெண்களை முதலில் உடைகளை நன்றாக அணிய சொல்லுங்க அப்புடின்னு ஒரு கூட்டம் வரும்..!

பெண்கள் உடையில் தான் உனக்கு காமம் என்றால் எத்தனை நாள் எட்டி பார்த்தாய் உன் தாய் குளிப்பதை..? உன் தாயின் உடை நலுவினால் முகம் திருப்பும் நீ ரோட்டில் யாரோ ஒரு பெண்ணின் உடை நலுவும் போது வெறிக்க பார்த்து நகர்வதற்கு பெயர் தான் ஆண்மையா..?

ஒரு பெண்ணின் அனுமதியின்றி எவன் ஒருவன் ஒரு பெண்ணின் அந்தரங்கத்தையும் அவளின் அங்கங்களையும் அடைய முயல்கிறானோ அவனை விட ஒரு இழிபிறவி இச்சமூகத்தில் இல்லை..!

சரி இங்கே பெண்கள் தவறு செய்கிறார்கள் சுகத்திற்காக என்று பலரும் கூறுவார்கள் உண்மைதான் மறுப்பதற்கில்லை அதே சமயம் ஆண்களும் தவறு செய்கிறார்கள் என்பது மறைப்பதற்கில்லை

தப்பு செய்றவன ஜாமீன்ல விட்டு பாதிக்கப்பட்டவனையும் பாதுகாப்பா வாழுன்னு சொல்லுற ஊர்ல நாம வாழுறோம்..!

இங்க பணம் தான் எல்லாமே இதுவரை தமிழகத்தில் எத்தனையோ பாலியல் படுகொலைகள் நடந்துள்ளது அதில் பெரிதும் பங்கெடுப்பது நீங்கள் உயர்த்தி பிடிக்கும் அரசியல் கட்சிகளின் தலையீடே..! ஆனால் என்றவது நீங்கள் உயர்த்தி பிடித்த அரசியல் கட்சியால் பலர் பாதிக்கப்பட்டு வீதிக்கு வந்து கதறியபோது நீங்கள் யாரை காப்பாற்றீனீர்கள்..? கட்சியை தானே..? அதனால் குற்றங்கள் அதிகரிக்கிறது..!

நீதிமன்றங்கள் இந்தியாவில் ஏன் உள்ளதென்றே தெரியவில்லை..! காரணம் நீதி தான் கிடைப்பதில்லை..!

சட்டங்களும் , தண்டனைகளும் அனைவருக்கும் சமமில்லை 5ஆயிரம் கோடி கடன் பெற்று வெளிநாடு சென்றவனிடம் கெஞ்சும் அரசு 50 ஆயிரம் பெற்றவனிடம் அடித்து பிடுங்குகிறது

சட்டங்களும், தண்டனைகளும் கடுமையாக்காமல் குற்றங்கள் ஒரு போதும் குறையபோவதில்லை..!

இதை பகிர்வதை கூட கேவலமாக நினைக்காதீர்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.