குழந்தைகளிடம் சற்று கவனமாய் இருங்கள்..! பெற்றோர்களே..!

0 314

குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக சாப்பிட கொடுக்காமல் முறையான இடைவெளியில் அதனை கொஞ்சம் கொஞ்சமாக கொடுப்பது நல்லது.

* குழந்தை இரவில் தூங்குவதற்கு முன் அதாவது 2 முதல் 3 மணி நேரத்திற்கு முன்னதாக அவர்கள் தங்கள் உணவை சாப்பிட்டு முடித்திருக்க வேண்டும்.

* சாப்பிட்டு முடித்த உடனே உங்கள் குழந்தையை ஓய்வெடுக்க வையுங்கள் அல்லது அவர்களை சிறிது நேரம் விளையாட அனுமதியுங்கள்.

* கடைகளில் கிடைக்கும் துரித உணவுகளை தவிர்க்கவும், கார்பனேட்டட் தன்மை கொண்ட குளிர்பான வகை, அளவுக்கு அதிகமான சாக்லேட் இவற்றையும் தர வேண்டாம்.

* குழந்தைகளை மெதுவாக சாப்பிட பழக்கப்படுத்துங்கள். டிவி பார்த்துக் கொண்டு சாப்பிடுவதை விட டேபிளின் மீது உட்கார வைத்து நிதானமாக சாப்பிட பழக்குங்கள்.

* குழந்தைகள் தங்கள் உணவை வாயில் வைத்து நன்றாக மென்று சாப்பிட வேண்டும் என கூறுங்கள். உணவை முறையாக உட்கார்ந்து சாப்பிட வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.