கடவுளின் தேசம் என்ற கேரளாவே..! தமிழகத்திற்கு நீ உதவ வேண்டாம்..!

0 591

கடவுளின் தேசம் என்ற கேரளாவே..! தமிழகத்திற்கு நீ உதவ வேண்டாம்..!

தாகத்தின் போது தமிழகத்திற்கு தண்ணீர் தர மறவாதே..! தமிழகம் ஓன்றும் குப்பைதொட்டியல்ல இனி குப்பையை கொட்டாதே..!

வாகனத்தில் வழிதெரியாமல் தடுமாறும் தமிழனுக்கு புன்னகையோடு வழிகாட்டு போதும்..! தமிழில் போசும் போது ஏளனாமாய் சிரிக்காதே என் தாய் தமிழ் வரலாற்றை தேடி பார் நீயே மொளனமாகிடுவாய்..!

பாவம் பசி என்று அரைகிலோ அரிசியை மது என்ற மனநலம் பாதிக்கப்பட்டவன் எடுத்துவிட்டான் என்று அரங்கேறிய படுகொலைகளை இனிமேல் அரங்கேறாதவாது பார்த்துகொள்ளுங்கள்..!

கடவுளின் தேசம் தண்ணீரில் தத்தளிக்கிறது என்று உலகமே பேசுகிறதாம்..! தமிழனுக்கு தர மறுத்த தண்ணீரே உனக்கே எமனாது எனும் போது ஒரு தமிழனாகிய நாங்கள் உங்களை வஞ்சிக்கவில்லை எம் மீனவன் கூட உங்களை காக்க படகுடன் படையெடுத்தான்..!

வேணாடாம் நிறுத்திக்கொள் தமிழகத்திடம் தண்ணீர் அரசியலை…!

உன்னை பற்றி அறியா குழந்தை கூட உன்னை காக்க உண்டியலை உடைத்தது..!

நன்றாக தெரியும் நீங்கள் இல்லாதவர்கள் இல்லை இருப்பதை இழந்தவர்கள் என்று..!

நீர் வடிந்து நிலமை மாறினாலும் தமிழகம் இல்லாமல் உங்களின் வளர்ச்சி இல்லை..!

இனி

தமிழன் என்றால் நகைக்காதே…!தமிழில் பேசினால் கேலி செய்யாதே..! வாகன ஓட்டிகளை கட்டி வைத்து கல்லெறிந்து உன் வீரத்தை காட்டாதே..!

உன் தேசம் இயல்பு நிலை திரும்பும் வரை தமிழனின் கரங்கள் உலாவும் கேரளாவில் நன்றி..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.