கசாப்பு குருவி, பழுப்பு கீச்சான் குருவி இதன் பெயரின் பின்னே உள்ள உண்மை தெரியுமா..?

0 220

பழுப்புக் கீச்சான் @ கசாப்புக் குருவி – Brown shrike (Lanius cristatus) இதன் குரலுக்காக ஒரு பெயரும், இது இரையை உண்ணும் முறைக்காக ஒரு பெயரும் கொண்ட பறவை இது.

தொடர்ந்து இது எழுப்பும் கீச்சுக்குரலுக்காக கீச்சான் என்று பெயர் பெற்றது. மேலும், இரையாக இது பிடிக்கும் ஓணான், சிறிய பாம்பு, எலி மற்றும் சிறிய பறவைகளை இதனால் அப்படியே கொன்று தின்ன இயலாது.

எனவே அவைகளை பிடித்து கருவேலம் போன்ற முட்செடிகளில் கறிக்கடையில் ஆடுகளை தொங்க விடுவதை போல முட்களில் குத்தி வைத்து, பின்னர் நிதானமாக அதை பாகம் பாகமாக உறித்து உண்ணும். இப்போது புரிகிறதா கசாப்புக்கு குருவி என்று பெயர் வந்த காரணம்.

மறக்காம இத கிளிக் பண்ணி நம்ம தமிழ் திமிரு யூடியூப் சேனல சப்கிரைப் பண்ணிடுங்க

பதிவு;ரவிந்தரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.