ஒரு லாரி ட்ரைவர் எழுதியது கேரளாவிற்கு..! பாதிக்கப்பட்டவனுக்கே வலி அதிகம்..!

0 1,247

கேரளா மழை வெள்ளம்

பாதை தெரியாமல் வழி கேட்ட போதேல்லாம் 30 km சுத்த விட்டாயே சேட்டா ..

தமிழில் சாப்பாடு இருக்கா என்று கேட்டபோதேல்லாம் கிண்டல் கேலி செய்தாயே சேட்டா ..

பிழைப்பிற்காக என் வாகனத்தில் சட்டத்திற்கு புறம்பாக 300 கிலோ அதிக எடை ஏற்றிவந்ததற்கு நான்கு நாட்கள் என் வாகனத்தை நீதிமன்றத்தில் நிற்க வைத்தாய் சேட்டா ..

நாள் முழுவதும் உனக்காக வேலைசெய்து வாடகையில் 1000 ருபாய் பிடித்தம்செய்து, உன் பணத்தை மிச்சம் செய்தாயே சேட்டா ..

வழிவிடாமல் ரோட்டில் என்முன் சென்ற உன் வாகத்திக்கு Horn அடித்ததற்கு என் வாகனத்தை வழிமறித்து என்னை வசைபாடினாயே சேட்டா ..

விவசாயத்திற்காக கேட்ட , முல்லை பிரியாறு அணை தண்ணீர் தர மறுத்தாயே சேட்டா ..

பரவாயில்லை சேட்டா .. நான் சாகும் வரை தமிழன்தான் ..

இயல்பு வாழ்க்கை திரும்ப இன்னும் ஆறு மாதம் ஆகும் உனக்கும் உன் குடுபத்திற்கும் தேவையான அத்தியாவசிய பொருட்களை இதோ விரைவில் கொண்டுவந்துகொண்டிருக்கிறேன் சேட்டா ..

இப்படிக்கு : வாகன ஓட்டி .

குறள் :

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்

யார் மனதையும் புண்படுத்த அல்ல

புண்பட்ட மனதின் வரிகள் இது

You might also like

Leave A Reply

Your email address will not be published.