என்றாவது யோசித்துள்ளீர்களா..? ஊதுபத்தி எதில் இருந்து தயார் செய்கிறார்கள் என்று..?

0 1,403

உயர்ரக இயற்கையான ஊதுபத்தி

தேவையான பொருட்கள்
தேவதாரு பட்டை – 30 கிராம்
ரூமீ மஸ்த்தகி – 30 கிராம்
மரிக்கொழுந்து – 30 கிராம்
குருவி வேர் – 30 கிராம்
லவங்கப் பத்திரி -30 கிராம்
லவங்கப் பட்டை – 30 கிராம்
கோரைக் கிழங்கு – 30 கிராம்
சம்பங்கி மொக்கு – 30 கிராம்
மட்டிபால் – 250 கிராம்

சாம்பிராணி – 250 கிராம்
சந்தன தூள் – 250 கிராம்
வெட்டி வேர் – 25 கிராம்
சடாமாஞ்சி – 40 கிராம்
மைசாட்சி – 20 கிராம்
பச்சிலை – 70 கிராம்
அகர் – 30 கிராம்
கின்னேரிப் பட்டை – 20 கிராம்
ஆகியவற்றை தனி தனியே அரைத்து நன்கு பவுடர் போல் செய்து கொள்ளவும். பிறகு
மகிழம்பூ – 40 கிராம்
ஏலரிசி – 40 கிராம்
லவங்கம் -25 கிராம்
ஜாதிபத்திரி – 5கிராம்
தாளிசபத்திரி – 5 கிராம்
கோஸ்டம் – 5 கிராம்
ஜாதிக்காய் – 5 கிராம்
கூலாப்பூ – 20 கிராம்
அன்னாசிபூ – 15 கிராம்
ஆகியவற்றை பொன்னிறமாக வருத்து நன்கு அரைத்துக் சலித்து எடுத்துக் கொள்ளவும். ஆவாரங்கட்டை கரி 160 கிராம் எடுத்து மேலே கூறப்பட்டுள்ள மூலிகை பொடிகளுடன் கலந்து பன்னீர்விட்டு மைபோல் அரைத்துக் கொள்ளவும்.

இதனுடன் 20 கிராம் சுத்த தேன் மற்றும் சீன கற்கண்டு 20கிராம் சேர்த்து அரைக்க வேண்டும் இக்கலவை மெழுகு பதமாக இருக்க வேண்டும். பின் ஒரு மட்டமான மென்மையான பலகையின் மீது மூங்கில் குச்சியையும் ஊதுவத்தி கலவையையும் சோத்து உருட்டி நிழலில் உலர்த்தி பயன் படுத்தலாம்

இவைகள் இன்றளவும் உற்பத்தியாகி சீனா பொன்ற பெரு நாடுகளுக்கு நம் நாட்டில் இருந்து ஏற்றுமதியாகிறது என்பது குறிப்பிடதக்கது..!

நாம் பயன்படுத்தும் ஊதுபத்திகள் பெரும்பாலும் செயற்கை நறுமணங்களே..! காரணம் தொழில்மயமானதால்..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.