உருளைக்கிழங்கு விவசாயிகளிடம் பெப்சி நிறுவனம் 1.05 கோடி நஷ்ட ஈடு கேட்டதன் பின்னணி..!

0 859

லேஸ் சிப்ஸ் என்ற உணவுப்பொருளுக்குரிய உருளைக்கிழங்குகளை பயிர் செய்ததற்காக குஜராத்தைச் சேர்ந்த நான்கு உருளைக்கிழங்கு விவசாயிகளிடம் ரூ.1.05 கோடி நஷ்ட ஈடு கேட்டு பெப்ஸி நிறுவனம் வழக்கு தொடர்ந்ததையடுத்து அதிர்ச்சியடைந்த விவசாயிகள் அரசு இதில் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.

வெள்ளிக்கிழமையன்று இந்த வழக்கு அகமதாபாத் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.

இதே போன்று பிற பயிர்களுக்கும் விதைகளுக்குமே ஏற்படும் தவறான முன் உதாரணமே பெப்சி வழக்கு என்று குமுறும் உருளைக்கிழங்கு விவசாயிகள், எந்த ஒரு பயிரையும் விளைவிக்க சட்டம் தங்களை அனுமதிக்கிறது, அதாவது பதிவு செய்யப்பட்ட பிராண்ட் விதைகளாக இல்லாதபட்சத்தில் எந்த விதையையும் கூட தாங்கள் பயன்படுத்த சட்டம் அனுமதிக்கிறது, இப்படியிருக்கையில் தங்கள் மீது பெப்சி நிறுவனம் எப்படி வழக்கு தொடர முடியும், இது தவறான முன்னுதாரணம் ஆகாவா என்று குமுறியுள்ளனர்.

இது குறித்து பயிர் பன்மைப் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமை ஆணையம் தங்கள் சார்பாக கோர்ட்டில் வாதாடி தேசிய மரபணு நிதியம் மூலம் இந்த வழக்கிற்கான செலவுகளை ஏற்க வேண்டும் என்று விவசாயிகள் அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.

இது தொடர்பாக பெப்ஸி நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, “இந்த விவகாரம் தற்போது நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் இது குறித்து கருத்து தெரிவிப்பது முறையாகாது” என்று முடித்துக் கொண்டுள்ளது.

பயிர் பன்மைப் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமை ஆணையத்துக்கு விவசாயிகள் எழுதிய கடித்தில், “இந்த விவசாயிகள் 3-4 ஏக்கர்கள் வைத்திருக்கும் சிறு விவசாயிகள். சேமிப்பிலிருந்துதன இந்த உருளை விதைகளைப் பயிர் செய்கின்றனர். இது 2018-ல் வாங்கப்பட்டது. ஆனால் பெப்ஸி நிறுவனம் தனியார் உளவு ஸ்தாபனம் ஒன்றை நியமித்து ரகசியமாக வீடியோ பிடித்து விவசாயிகள் வயல்களிலிருந்து சாம்பிள்களைச் சேகரித்தது, தங்கள் உண்மையான நோக்கம் என்ன என்பதை மறைத்து இத்தகைய செயலில் பெப்ஸி ஈடுபட்டுள்ளது. அதன் பிறகு எங்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளது” என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

இது பற்றி அங்குள்ள விவசாயிகள் கூறியபோது, “விவசாயம் செய்யும் நாங்கள் எங்களுக்கு கிடைக்கும் விதைகளை பயிரிடுகிறோம். அந்த வகையில் தான் இந்த விதைகளை பயன்படுத்தி பயிரிட்டோம். இது பற்றி தகவல் அறிந்த பெப்சி நிறுவனம் தனியார் துப்பறியும் நிபுணர்களை கொண்டு எங்களுக்கு தெரியாமல் தோட்டத்திலிருந்து மாதிரிகளை சேகரித்து சென்றுள்ளது” என கூறினார். உருளைக்கிழங்கை பயிரிட்டதால் வழக்கு தொடரப்பட்டுள்ள இந்த விவசாயிகள் பெரும்பாலும் 3 முதல் 4 ஏக்கர் நிலங்களை கொண்டவர்களாகவே இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

பெப்ஸி நிறுவனம் பயிர் பன்மைப் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமை சட்டம் 2001-ன் பிரிவு 64-ஐ தங்களுக்குச் சாதகமாக்கி நிறுவன உரிமைகளை விவசாயிகள் மீறுவதாக வழக்கு தொடர்ந்துள்ளது. ஆனால் விவசாயிகள் இதே சட்டம் 39ம் பிரிவைச் சுட்டிக்காட்டி விதைகளைச் சேமித்து, பயன்படுத்தி, மறுபயிர் செய்து, பரிமாற்றம் செய்து, விற்பனை செய்து கொள்ள உரிமை உள்ளது என்று கோருகிறது. அதாவது பிராண்டட் விதையை விற்காமல் இப்படிச் செய்துக் கொள்ள சட்டம் அனுமதிக்கிறது என்கிறது விவசாயிகள் அமைப்பு.

உலக வர்த்தக அமைப்புக்குப் பிந்தைய காலக்கட்டத்தில் இது போன்ற வழக்கு முதல்முறையாகும். எனவே இதில் தவறாக முடிவெடுத்தால் அது இந்தியாவில் உள்ள பிற விவசாயிகளையும் மிக மோசமாகப் பாதிக்கும், வாழ்வாதாரங்கள் பறிபோகும் என்று விவசாயிகள் அமைப்பு எச்சரித்துள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.