உடல்மேல் கொண்ட வெறியினை ஆக்கமாய் ஆபாசத்தை விதைத்திடுவான் அங்கு வயதின் வசியத்தால் மதி மயங்கி சென்றிடாதே மானத்தை அடகு வைத்துடாதே..

0 250

பெண்ணே இந்த உலகம் உனக்கானது என்று எண்ணி ஏமாந்துவிடாதே காரணம் கயவர்கள் காலம் காலமாய் வாழும் இடமும் இவ்வுலகே என்பதை தெரிந்து தெளிந்து வாழ கற்றுக்கொள்..

முதலில் வலைதளத்தில் யாரிடமும் வளைந்து கொடுத்து பேசாதே நீ திமிரானவளாய் வாழ்வது தவறல்ல தீய இச்சையோடு நெருங்குபவனோடு நட்பேன்ற பெயரில் திளைப்பது தான் மகாதவறு..

ஆண்மகனில் எவனையும் நம்பாதே உன் தமையனையும் தந்தையையும் தவிர்த்து உனக்கு உண்மையாய் இருக்க இங்கே எவனும் புத்தன் அல்ல..

பேச்சில் சொற்பொழிவை ஆற்றிடுவான்
சமூகவலையளத்தில் பெண்ணியம் பேசிடுவான் ஆனால் மனதில் ஆயிரம் காம இச்சத்தை இதயத்தில் வளர்த்துகொள்வான்..

உடல்மேல் கொண்ட வெறியினை ஆசை வார்த்தையினால் அன்பாய் ஆபாசத்தை விதைத்திடுவான் அங்கு வயதின் வசியத்தால் மதி மயங்கி சென்றிடாதே மானத்தை அடகு வைத்துடாதே..

ஆணென்ன பெண்னென்ன என்று பாகுபாடு பார்க்காமல் பழகும் காலமிது என்று கண்ட நேரத்தில் காதல் மயக்கத்தில் பேசுவதாலே இங்கு எல்லா கஷ்டமும் கரைபுறண்டு வருகிறது..

ஆறுதலை யாரிடமும் தேடாதே முக்கியமாக அன்னிய ஆண்னிடம் அன்பேனும் அடைக்கலம் நாடாதே..

எத்தனை மாற்றங்கள் வந்தாலும் பெண்ணின் கற்பு கரைபடியாத காகிதமே அதனை பட்டம் விட்டு பார்வையை உன் மீது விழ வைக்காதே டிக்டாக் மியூசிக் என்று கவர்ச்சிக்கு அடிபணியாதே..

முடிந்த அளவு உன்னை நீயே பாதுகாத்துக்கொள் பாருலகில் பாதுகாப்பை எவரிடமும் எதிர்பார்க்காதே பெற்றோரை தவிர்த்து உன்னை அரவணைத்து செல்ல இங்கு முயலும் ஆமையும் இல்லை அனைத்தும் ஒன்றிக்கொள்ளும் ஓநாய்களே என்பதை புரிந்துகொள்..

அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள் அனைத்து ஆணையும் குறிப்பிடவில்லை குற்றம் செய்பவனுக்கே பொருந்தும்..

முகநூல் பகிர்தல்

You might also like

Leave A Reply

Your email address will not be published.