ஈரக்கொலை ஆடுது !நுரைஈரல் பாடுது!… கண்ட கண்ட மருந்தை சாப்பிடுறது! …

0 243

ஈரக்கொலை ஆடுது !நுரைஈரல் பாடுது!…
கண்ட கண்ட மருந்தை சாப்பிடுறது! …..

அப்புறம் கிட்னி சட்னி ஆயிடுச்சுன்னுறது!
அடுத்தவங்களை வாட்டி வதைக்கிறது!..

இதே பிழைப்பாப் போச்சு!
மெத்த மேதவித்தனமாபோச்சு!…

கைக்காலை வைச்சுக்கிட்டு சும்மா ,இருக்கிறதில்லே!
கண்டத மேயாம ,வாய மூடிக்கிட்டு , இருக்கிறதில்லே!…

சம்பாதிப்பதெல்லாமே மருத்துவ செலவுக்கு…..!
டாக்டர் பீஸுக்கு !மருத்துவ செலவுக்கு!

கட்டுப்பாடு வேணும் , மனுஷனுக்கு!…
நாவடக்கம் வேணும் ,உரிய வயசுக்கு!

சின்ன வயசு!.. கடப்பாறையே முழுங்கும்!…
தளர்ந்தவயசு! சீடைக்கே பல்லு நொறுங்கும்!..

வயசுக்க்கேற்ற பக்குவம் வேண்டும்!…
தான்றோறித்தனமான் போக்கை மாற்றனும்!…

மதிச்சு சொன்ன கேட்க்கனும்!
ஈஸிகோயிங்கா, மாறனும்!…

போறவறைக்கும் நடை உடை வேணும்!
தான் வேலையை தானே பார்க்கானும்!

அடுத்தவருக்க பாரத்தை குறைக்கனும்!
ஹப்பியா லைப்பை ஓட்டனும்!……

பள்ளத்தூர் அ.அப்துல் வஹாப்

You might also like

Leave A Reply

Your email address will not be published.