இரவு நேரங்களில் பேருந்தில் நெடுந்தூரம் பயணம் மேற்கொண்ட நபர் என்றால் உங்களுக்கு நிச்சயம் இந்த அனுபவம் இருக்கும்..!

1 2,788

பொதுவாக இரவு நேரங்களில் பேருந்தில் செல்பவர்களுக்கு அனேகமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் உணவு இடைவேளை என்று நெடுஞ்சாலை அருகில் ஏதோ ஒரு கடையில் பேருந்துகள் நிறுத்துவார்கள் அங்கே உணவின் விலை அதிகமாக இருக்கும் தண்ணீரின் விலை இருமடங்காக இருக்கும் கழிப்பிட கட்டணம் இருமடங்காக இருக்கும் இத்தனையும் எதற்காக என்று பார்த்தால் பேருந்து நிற்கும் நடத்துனருக்கும் இலவச உணவு

பெரும்பாலும் பலரும் இதை பற்றி அந்த நேரம் வருத்தப்படுவதோடே விட்டுவிட்டார்கள்..!

ஆனால் எப்படிப்பார்த்தாலும் இதிலும் தமிழக அரசிற்கு பங்கீடு உண்டு தமிழக அரசு நினைத்தால் சாலையோரம் ஒரு சிற்றுண்டி உணவகம் அமைக்க முடியும் ஆனால் இதை எந்த அதிகாரிகளும் அமைச்சரும் எம்எல்ஏ முன்னெடுக்கவில்லை எவனோ ஒருவனுக்கு காண்ட்ராக்ட் எனும் பெயரில் வழங்கிவிட்டு அவனிடம் உணவுகளை மக்கள் அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது கேவலமான அரசின் நிலையே..!

கிராமப்புறங்களில் மதுக் கடைகள் அமைக்க முடிந்த அரசிற்க்கு நெடுஞ்சாலைகளில் ஏன் உணவு வைக்க முடியவில்லை..?

பேருந்தில் பயணம் செய்பவர்கள் அனைவருமே பணக்காரர்கள் அல்ல பேருந்து பயணத்திற்கு பயணச்சீட்டு எடுக்கவே அல்லாடி தான் பாதிப்பேர் உழைத்த பணத்தை சொந்த ஊருக்கு கொண்டு செல்லும் வழியில் இது வாரியான வழிப்பறிகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று தான் இதனால் பலர் பட்டினி கிடந்து சொந்த ஊருக்கு செல்கின்றனர் குறிப்பாக முதியவர்கள்..!

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு இதுபோன்ற சம்பவங்கள் தெரியவில்லையா இல்லை தெரிந்தும் தெரியாதது போல் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்…?

மதுக்கடையில் சகல வசதிகளையும் செய்து கொடுக்கும் தமிழக அரசு ஏன் மக்களை கண்டுகொள்வதில்லை..?

திருச்சியிலிருந்து சென்னை நெடுஞ்சாலையில் விழுப்புரம் அருகே ஒரு சிற்றுண்டியில் அந்த பேருந்து நிறுத்தப்பட்டது அதில் வயதான ஒரு தாத்தா பாட்டியும் உணவிற்காக இறங்கினார்கள் உணவின் விலை கேட்டபோது உணவு வேண்டாம் என்று தண்ணீர் வாங்க முடிவு செய்கிறார்கள் தண்ணீரின் விலையை கேட்டபோது தண்ணீரும் வேண்டாம் என பேருந்தில் ஏறி உட்காருகிறார்கள்

நீங்களும் நான் நினைத்திருக்கலாம் பணம் இருந்தால் வாங்கி உண்ண வேண்டியது தானே என்று ஆனால் அவர்களுக்கு அந்த பணம் எவ்வளவு முக்கியம் என்று தெரிந்திருக்கும்

அங்கு விற்கப்படும் உணவின் விலையை வைத்து அவர்களின் ஒருநாள் உணவுத்தேவையை பூர்த்தி செய்து விடலாம் அவ்வளவு விலை வைத்து விற்கப்படுகிறது

இந்நிலை தொடர்ந்தால் பலரும் பட்டினி கிடந்தே பயணம் செய்ய வேண்டிய நிலை வரும் விரைவில்

தயவு செய்து இதை பகிர்ந்து தமிழக மக்களின் கவனத்தையும் அரசின் கவனத்தை பெற முயற்சிப்போம்

பொதுநலன் கருதி வெளியிடுவோர்

You might also like
1 Comment
  1. Nagarajan says

    Kadantha Sani kilamai nanum Chennai – Trichy sellum pothu pathika Patten athanal.

Leave A Reply

Your email address will not be published.