இன்று தொலைந்துபோன 90ஸ் கிட்ஸ் ஞாபகங்கள் இவை..! இவையெல்லாம் மீண்டும் சாத்தியம் தானா..?

0 428

முன்னெல்லாம் நான் சிறுவனாக இருந்தபோது எங்க ஊர் அக்காக்கள் தலை நிறைய பூ வைத்து, பாவாடை தாவணியில் வலம் வருவார்கள். பாவாடை தாவணி கிராமத்து உடையாகவேப் பார்க்கப்பட்டது. ஆனால் சுடிதார் வந்த பிறகு பாவாடை தாவணி கலாச்சாரமெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. இப்போது சினிமாக்களில் மட்டுமே பார்க்க முடிகிறது.

● கிராமங்களில் வீடுகளின் கூரை ,தென்னை அல்லது பனை ஓலையால் வேய்ந்தும், பசுஞ்சாணம் கொண்டு தரை மெழுகியும் காணப்படும். முக்கியமாக வெளிப்புறத்தில் அழகிய திண்ணை ஒன்றும் இருக்கும். இப்போது அவற்றை எல்லாம் பார்க்கமுடியவில்லை.

● அப்போது தெருக்களிலும், மரங்களிலும், காடு மேடுகளிலும் சுற்றித் திரிந்து விளையாடினோம். இப்போது கிராமத்தில் உள்ள பசங்க எல்லாரும் indoor games தான் விளையாடுகிறார்கள்.

● சிவப்பு நிற வெல்வெட் பூச்சிகளை நாங்கள் விவசாயம் செய்த நிலத்தில் நிறையவே பார்த்து மகிழ்ந்தது உண்டு. அந்தப் பூச்சியை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஏன்னா அது நம்மள கடிக்காது. இப்போலாம் பார்க்கவே முடியவில்லை. பட்டாம்பூச்சிகளையும், தட்டான்(தும்பி)களையும், மைனா கூட்டத்தையும் மிகக் குறைந்த அளவே பார்க்க முடிகிறது.

● அப்போது கிணறுகளில் குடிநீர் எடுத்தோம்..அவ்வளவு சுவையாக இருக்கும். இன்று ஆழ்துளைக் கிணறுகள் வந்தபடியால் உப்புத் தண்ணீர் கிடைப்பதே கூட பெரிய விஷயமாக இருக்கிறது.

நம்ம வடிவேலு அவர்கள் தோட்டத்தில் கிணறு காணாமல் போன மாதிரி இன்று கிராமங்களும் காணாமல் போய்விட்டன.

Internet இல்லாத வாழ்க்கை.

அன்றாட வாழ்க்கையில் பணம் கொடுத்து watercan வாங்கியது இல்லை.

Powercut ஆனாலும் Emergency light ஐ உபயோகிக்காமல் இருளில் மின் மினி பூச்சியை ரசித்தது.

புகை மாசு இல்லாத சூழ்நிலையில் வாழ்ந்தது.

Smartphone இல்லாத எளிமையான வாழ்க்கை.

Selfie மோகம் இல்லாத வாழ்க்கை.

மண்வாசனை.

Pumpset குளியல்.

மாட்டு வண்டி.

இரவு நேர மழை.

மழைக்கால தவளைகளின் உரையாடல்.

பொட்டல்காட்டு கிரிக்கெட்.

நுங்கு வண்டி.

தோப்பு மாங்காய்

You might also like

Leave A Reply

Your email address will not be published.