இன்னும் எவ்வளவு நாள் தான் இதெல்லாம் ஆபாசமுன்னு பேசமயே இருக்க போறோம்..?

0 490

Qura பகிர்வு

ஆணின் இசைவுக்கு ஏற்ப ஒரு பெண் நம்பிவந்தால்,[ஆணின் விருப்பம் இல்லாமல் நம்பிவந்தேன் என்று கூறக்கூடாது.] அவளை கட்டி காப்பது ஆணின் பொறுப்பு. ஏமாற்றினால் அது குற்றமாகும். இது பெண்ணிற்கும் பொருந்தும்.

ஆணோ, பெண்ணோ இருவரும் நம்பி வருபவர்களை கைவிடுவது தவறு. பெரும்பாலும் ஆண் செய்யும் தவறுகள் இந்த உலகத்திற்கு வெகு விரைவில் புலப்படுகின்றன. ஆனால், பெண்கள் செய்யும் தவறுகள் பெரும்பாலும் வெளியில் தெரிவது குறைவு.

நான் மனித உரிமைத்துறையில் [பன்னாட்டு சுழற் சங்கம்[Rotary International] பணியாற்றியுள்ளேன். இதில் கத்தோதிக்கர் மட்டுமே உறுப்பினர் ஆகலாம். ஆனால், இலங்கையில் உள்ள வடமாநிலங்களில் பின்நாட்களில் எல்லா மதத்தினரும் உள்வாங்கப்பட்டனர் இந்த பன்னாட்டு சுழற் சங்கத்தில் பணியாற்றியதால் எனக்கு ஆண்கள், பெண்கள் செய்த தவறுகளிலின் பல துய்ப்புகள் நினைவுக்கு வருகின்றன. ஆனால், என்னால் இந்த சேதிகளை வெளியில் கூறமுடியாது. காரணம், வெளியில் சொல்வதற்கு எங்களுக்கு இசைவு இல்லை.

நீங்கள் செய்திகளை ஒவ்வொரு நாளும் கேட்டு வருபவர்களுக்கு ஒன்று தெரிந்து இருக்கும். குறிப்பாக இந்த ஆறு மாதங்கள் எடுத்துக் கொள்ளவோம். இந்த ஆறு மாதங்களில் கேட்ட செய்திகளின் அடிப்படையில் சொல்கிறேன், பெண்களே நூற்றுக்குத் தொண்ணூறு விழுக்காடு ஆண்களை பெண்கள் ஏமாற்றியுள்ளனர்.[பொள்ளாச்சி நிகழ்வுக்கு முன்] இவை ஒவ்வொரு நாளுக்கும் ஒன்று ஒன்று என்ற கணக்கில் வெளிவந்ததால் யாரும் பெரிதாக கவனிக்கவில்லை. கவனித்திருந்தாலும் இப்பொழுது எல்லோரும் மறந்துவிட்டார்கள்.

ஒரு பெண் ஏமாற்றுகிறாள் என்றால், அவள் பின்னால் இன்னும் ஓர் ஆண் இருக்கிறான், ஒரு ஆண் ஏமாற்றுகிறான் என்றால், அவன் பின்னால் இன்னும் ஒரு பெண் இருக்கிறாள் என்று கூறலாம். திரியும், எண்ணெய்யும் இல்லாமல் விளக்கு எரியாது.

எல்லா நிகழ்வுகளிலும் ஆணும், பெண்ணும் இணையாகத்தான் செயற்படுகிறார்கள். இதில், ஏமாற்றம் ஒன்றும் விதிவிலக்கில்லை. வேண்டும் என்றால், நீதிமன்றங்கள் சென்று பாருங்கள் உங்களுக்கு தெரியும். ஆணினதும் பெண்ணினதும் வண்டவாளங்கள் ஒவ்வொன்றாக வெளியில் வரும். இதில் என்ன கவலைக்குரிய சேதி எனின், ஆண்கள் பெண்ணுக்கு எதிராக செய்யும் குற்றங்கள் பெரிதாக்குவது இல்லை. இதனால், ஆண்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிடுகின்றனர். ஆனால், பெண்கள் ஆண்களுக்கு எதிராக செய்யும் குற்றங்கள் பெரிது ஆகின்றன. இதனால், பெண்களின் வாழ்க்கை வீணாகின்றன. அதோடு தங்கள் இயல்பு வாழ்க்கை திரும்புவது கடினம். காரணம், இப்பொழுது உள்ள மக்களின் கட்டமைப்பு இப்படி உள்ளது.

உளவியல் ரீதியில் நோக்கும் போது.

பெரும்பாலான எல்லா உயிரினங்களில் உள்ள ஆண் இனம்,பெண் இனத்தை கவர்வதற்கு முயற்சி செய்யும்.

புறா,

குறிப்பாக, புறாவை எடுத்துக்கொள்வோம் ஆண் புறா பெண் புறாவை சுற்றிக் கூவும், இந்த கூவலை பெண் புறா ஏற்றுக்கொண்டால். ஆண்புறாவின் கூவலுக்கு பெண் புறா அழகான நடைபோடும்.

மயில்,

மயிலை எடுத்துக்கொண்டால் பெண்மயிலை கவர்வதற்காக ஆண்மயில் அழகாக தோகை விரித்து ஆடும்.

இவ்வாறாக பல உயிரினங்களை எடுத்துக்கொள்ளம். நான் எனது வீட்டில் நிறைய உயிரினங்கள் வளர்த்துள்ளேன். இதனால், விலங்களைப்பற்றி சிறு அறிவு எனக்கு உண்டு.

இவ்வாறு ஆண் குணம் உள்ளது. இது கட்டுக்குள் உள்ளவரை வன்முறையில்லை. கட்டுப்பாட்டை இழந்து விட்டால் வாழ்க்கையை தொலைத்து விடுவார்கள்.

இறுதியாக,

பெண்கள் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும். ஆண்கள் வலைவிரிக்கிறார்கள் என்றால், அதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். திருமணம் செய்துகொள்ளும் முன் ஒரு ஆண் எங்கு அழைத்தாலும் செல்லவேண்டாம். திருமணத்திற்கு பின்னரும் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று கேட்டால். அது என்னால் சொல்லமுடியாது. எல்லாம் உங்கள் கையில்தான் உள்ளது. ஆனால், நூற்றுக்கு எழுபத்தைந்து விழுக்காடு பாதுகாப்பு உங்களுக்கு உண்டு, என்பது என் நம்பிக்கை.

எப்பொழுதும் ஆண்கள் செய்யும் தவறை ஏற்கமுடியாது. ஒரு ஆணோ, பெண்ணோ தீங்கு இல்லாதவர்களாக வாழவேண்டும் எனில், அது அவர்களின் பெற்றோர்களின் கையிலும் உள்ளது.

நான் பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிராக நடந்த குற்றத்தை எண்ணி வருத்தத்தில் உள்ளேன். இந்த குற்றவாளிகள் இந்த உலகில் வாழும் தகுதியை இழந்துவிட்டார்கள். தேர்தலில் பணம் வாங்கி உங்கள் வாக்கை விற்றீர்கள். இப்பொழுது அதன் பயனை அறுவடை செய்கிறீர்கள்.

இனியாவது திருந்துங்கள்

பதிவு: தமிழ் மறவன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.