இந்தியா பட்டினி பட்டியலில் 103 இடம் வர காரணம் யார்..? முட்டாள்தனமான வாதத்தை தவிருங்கள்.!

0 209

முகநூல் நண்பர்கள் ஒன்றை தெரிந்துகொள்ள வேண்டும் இங்கு பெற்றோர் சோறு போடவில்ல என்ற கண்ணோட்டத்தில் பதவிடுகிறீர்கள்,விசயம் அதுவல்ல பெற்றோர் வருமானத்தில் மூன்று வேளையும் முழு உணவு வழங்க முடியவில்லை அப்படி வழங்கும் உணவும் சத்தானதாக இல்லை கருவுற்ற பெண்ணுக்கு சத்தான ஆகாரம் கிடைப்பதில்லை காரணம் அவள் குடும்ப வருமானம் அவ்வளவுதான்,இதில் பிறக்கும் குழந்தைக்கு அவள் எங்கிருந்து தாய்பால் கொடுக்கமுடியும்?இதற்கு ஒரே வழி தனிநபர் வருமானம் உயரவேண்டும் அதற்கு உத்தரவாதம் வேண்டும்,மூன்று வருடங்களுக்கு முன் 100 வது இடம் தற்போது 103 வது இடம் இதற்கு காரணம் அரசுகளே,பெற்றோர்கள் இல்லை அதிகம் பாதிப்பவர்கள் தினச்சம்பளம் வாங்குபவர்கள்தான்.

2009 களில் திடீரென ஜெர்மனி, ஸ்பெயின், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இன்னும் பல மேலை நாடுகளின் வங்கிகள் எல்லாம் திவாலாகியது.

சீனாவில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டது. உலகமே பொருளாதார தேக்கநிலையால் ஸ்தம்பித்து நின்றது.

உலகம் முழுதும் சுமார் 80 மில்லியன் பேர் வேலை இழந்தனர்.
உலகின் பல துறைமுகங்கள் எரிவாயு தட்டுப்பாட்டை சந்தித்து செய்வதறியாது விழி பிதுங்கி நின்றன.

சரக்கு கப்பல்கள் நங்கூரம் போட்டு மாதக்கணக்கில் துறைமுகத்தை விட்டு அகலாமல் நின்றன. கச்சா எண்ணெய் விலை 160 டாலர்களை தொட்டு அரக்க முகம் கொண்டு பயமுறுத்தியது

பல நாடுகளில் அனல்மின் நிலையங்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதற்கிடையில் போர் பதற்றங்கள் வேறு.

இந்தியா மட்டும் சீராக சென்றுகொண்டிருந்தது. ஒரு கணம் அமெரிக்கா, ரஷ்யாவின் பார்வைகள் இந்தியாவின் பதற்றமில்லா நிலையை கண்டு ஆச்சரியத்தில் மூழ்கின

இந்தியாவில் ஒரே ஒரு வங்கி கூட திவாலாகவில்லை. வளர்ச்சி மற்றும் உற்பத்தி விகிதம் வழக்கம்போல சராசரி அளவில் உயர்ந்தது

மேலை நாடுகளுக்கு சேவை செய்யும் IT நிறுவனங்கள் மட்டும் அமெரிக்காவிடம் இருந்து ப்ரொஜெக்ட் வராததால் தங்கள் ஊழியர்களை Layoff செய்தது. வேறு யாரும் வேலை இழக்கவில்லை.

உணவு தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. சிறு நிறுவனங்கள் கூட இந்தியாவில் மூடப்படவில்ல

இதற்கிடையில் ஊரக மேம்பாட்டுக்காக வாஜ்பாய் ஆட்சியில் உலக வங்கியில் வாங்கிய கடனும் அடைக்கப்படது

இது அத்தனையையும் சாத்தியமாக்கிய அந்த மாமேதை இந்தியப் பிரதமரை, மூன்று ஐரோப்பிய நாடுகளின் பிரதமர்கள் வந்து சந்தித்து நெருக்கடி நிலையை சமாளிக்க ஆலோசனைகள் கேட்டார்கள்.

ஆனால் இன்றோ விவசாய நாடான இந்தியா பட்டினியில் 103 வது இடம்

எதற்கும் சற்று ஒரு முறை நீங்கள் சிந்தனை செய்யுங்கள்..! விருப்பப்பட்டால் பகிருங்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.