இது உங்களுக்கு முதல் தடவையா கூட இருக்கலாம் .இவ்வளவு நெருக்கமா விமானத்தை

0 295

இது உங்களுக்கு முதல் தடவையா கூட இருக்கலாம் .இவ்வளவு நெருக்கமா விமானத்தை பார்த்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன் .

இராஜராஜெஸ்வரத்தில் உள்ளே நுழைந்தவுடன் ஏற்படும் பிரமிப்புல மனசு ,புத்தி ரெண்டும் ஹோன்னு போயிடும் .நிறுத்தி நிதானமா பார்க்கணும்னா ஒரு நாலஞ்சு தடவை போகணும் .அதுக்கப்புறம் தான் கல்வெட்டு எங்க இருக்கு .

கோவிலோட வடிவமைப்பு எப்படி ,எங்கங்க எந்த சுவாமி இருக்காங்கன்னு யோசிக்கவே முடியும் .

மனசயும் ,புத்தியையும் திகைப்புல ஆழ்த்துறதுனால எல்லாரும் அவங்க பங்குக்கு ஒரு கதைய சேர்த்து விடுவாங்க .கீழே தெற்கு திருச்சுற்று மாளிகையில் இருக்கும் நந்தி போல தான் மேலே விமானத்தின் அருகே இருக்கும் நான்கு நந்திகளும் அப்படின்னு .

ஆனா அந்த நந்தி நான்கும் சுதையால் செய்யப்பட்டவை தான் .

சுதை அப்படின்னா செங்கல் உடைத்தது ,சுண்ணாம்பு ,வஜ்ஜிரம் , வெல்லம் ,வாழைப்பழம் ,முட்டையின் வெண்கரு ,கடுக்காய் நீர் இவையெல்லாம் சேர்த்து செய்யப்படற ஒரு கலவை.

நம்ம ஊர்ல அரண்மனை எல்லாம் இந்த கலவை கொண்டு தான் கட்டப்பட்டிருக்கு .இன்றைக்கு நூற்றாண்டுகள் கடந்து நிற்கும் செட்டி நாட்டு வீடுகள் .நமது ஊரில் உள்ள பழமையான வீடுகள் எல்லாமே இதைக்கொண்டு தான் கட்டப்பட்டிருக்கு .

சொல்ல வந்த விஷயத்த விட்டுற போறேன் .ஆக விமானத்து கிட்ட இருக்கறது கருங்கல் நந்தியில்லை .விமானத்தில் உள்ள சுதை சிற்ப வேலைகளும் இராஜராஜர் காலத்தது

அங்கதான் உங்க கிட்ட சொல்ல ஒரு விஷயம் இருக்கு .”உடையவன் இல்லாத வேலை ஒரு முழம் கட்டை ” அப்படின்னு எங்க பக்கம் ஒரு பழமொழி சொல்லுவாங்க .அதாவது ஒரு வேலைய ஒருத்தர்ட்ட சொல்லிட்டு அவரு கூடவே உட்காந்திருக்கனும் ஒழுங்கா செய்யறாரான்னு பார்த்துகிட்டே இருக்கனும் இல்லாட்டி அந்த வேலை அவ்வளவுதான் .இன்னைக்கு கூட இருந்து பார்த்தாலுமே ஒன்னும் ஆகாது.

தஞ்சை இராஜராஜெஸ்வரம் விமானத்தோடு உயரம் 216 அடி உத்தேசமா ஒரு இருநூறு அடியில் இந்த சுதை சிற்பம் இருக்குன்னு வச்சிக்கலாம் .அவ்வளவு தூரத்துக்கு எவன் பைனாகுலரா வெச்சு பார்க்க போறான் ! ஏண்டா சரியா செய்யலன்னு கேட்க போறான் ! அப்படி நினைச்சிருக்கலாம் தான் .ஆனா அன்னைக்கு வேல பார்த்தவன் கூலிக்கு மாரடிக்கறவன் இல்லையே .

மகர தோரண அமைப்புல முதல் வரிசை பூதகணங்கள் ,இரண்டாவது வரிசை யானைகள் ,மூன்றாவது வரிசை யாளி ,அதற்கு பின் மூன்று வரிசை அலங்கார வேலை .எல்லாம் இருநூறு அடிக்கு மேல .இவ்வளவு உயரத்துல உயிரை பணயம் வெச்சு, இதை செஞ்சா யாரு பாக்கபோறான்னு அந்த கலைஞன் நினைச்சிருந்தா நான் ஏங்க இவ்வளவு நீட்டி முழக்கி எழுதப்போறேன் ! !

முகநூல் பகிர்வு

உங்களை சார்ந்தவர்களும் இதனை ரசிக்கட்டும் பகிருங்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.