இதுதான் உண்மை உள்ள இருக்குறது முழுசா படிக்காமலே பெண்களை கேவலப்படுத்திட்டான்னு இப்போ வருவானுங்க பாரு..!

0 1,908

Qura பகிர்வு

ஒரு மனிதனின் அடிப்படை தேவை [உணவு, உடை, உறையுள்]. இன்றைய காலத்தில் இந்த மூன்று முதன்மையான காரணங்கள் கேள்விக்குறியில் உள்ளது. சரி இந்த வேள்விக்கு முடிந்தவரைக்கும் சிறப்பாக விடை எழுத முயற்சிக்கிறேன்.

இன்றைய காலத்தில் பெண்களை பற்றிய ஆடைகளை பற்றி பேசினால் கோவப்படுகிறார்கள். எடுத்த எடுப்பில் வெள்ளைகாரனும் இப்படி தானே உடை உடுக்கிறார்கள் அவர்கள் இப்படி உடைத்தோற்றத்தை பற்றி கணக்கில் எடுத்துக்கொள்வது இல்லை என்று கூறுவார்கள். இந்த தகவல் உண்மையான தகவலா???

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உடலை மறைத்து பல பெண்களையும், நவநாகரிக ஆடையுடன் பல பெண்களையும் நடக்கவிட்டுப் பரிசோதனை நடத்தினார்கள். அதில் அரைகுறை ஆடையுடன் நடந்த பெண்களில் 95% பேர் ஆண்களால் பாலியல் சேட்டைகளுக்கு உள்ளாயினர். உடலை மறைத்துச் சென்ற பெண்களை யாரும் நெருங்கக்கூட இல்லை என்று நிரூபித்திருக்கிறார்கள். இதுதான் பெண்களுக்குப் பாதுகாப்பு என்று அந்த நிறுவனம் அறிவுரையும் தருகிறது. உடலை மறைப்பது பெண்கள் முன்னேற்றத்துக்குத் தடை என்றால் உலக அளவில் சமூக சேவைக்கான நோபல் பரிசைப் பெற்ற அன்னை தெரசாவுக்கு மட்டும் எப்படி அது சாத்தியம்? அவரது ஆடை அவரின் சுதந்திரமான சேவைக்குத் தடையாக இல்லையே!

நானும் வெளிநாட்டில் வாழ்பவன் எனக்கு தெரியும் ஒரு வெள்ளைகாரனின் எண்ணம் எப்படிப்பட்டது என்று.

ஆடை மனிதனின் மானத்தை மறைக்கத்தானே தவிர அடிமைத்தனத்தை, சுதந்திரத்தைக் கட்டுபடுத்த அல்ல. ஆண்களைவிடப் பெண்கள் உடல்ரீதியாக மாறுபட்டவர்கள் என்கிறபோது, ஆடைக் கட்டுப்பாடு தவறு என்று சொல்ல முடியுமா? அரை நிர்வாணம்தான் பெண்ணுரிமை என்றால். நாம் என்ன செய்வது.

இன்றை காலத்தில் ஒரு சிலர் ஆடைகளை பற்றி கூறினால் உடன் அந்த காலத்தில் சிலைகள், ஓவியங்களை காட்டி இப்படி தான் எம் மக்கள் வாந்தார்கள் என்று எடுத்துக்காட்டுவர் இது உண்மையா???

இதை ஒரு போதும் ஏற்கமுடியாது. கலை, ஓவியங்களில்அந்த காலத்தில் கற்பனைகளே அவ்வாறு செதுக்கினார்கள். உரோம், கிரேக்கம் போன்ற நாகரிகங்களில் அரசர்கள் எல்லோருடைய சிலை, ஓவியங்கள் எல்லாம் ஆடை இல்லாமல் தான் இருக்கும். அதற்காக அவர்கள் ஆடை இல்லாமல் திரிந்தார்கள் என பொருள் படாது.

அருள்மொழிச்சோழனின் மனைவியை ஆடை இல்லாமல் சிற்பி நிற்கசொல்லியிருந்தால். சிற்பியின் தலை தரையில் உருண்டு இருக்கும்.

2000 ஆண்டுக்கு முன் பருத்தி பயிர் விளைவித்துஅதை அறுவடை செய்து, ஆடை நெய்துஉலகுக்கு ஏற்மதி செய்த தமிழனை. ஆடை உடுத்த வெளிநாட்டவர் தான் கற்றுக் கொடுத்தார்கள் என்ற மாதிரி கதையை சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

தெறி அல்லது பொத்தான்

போன்ற அமைப்புகள் மிகப் பழங்காலத்திலேயே வழக்கில் இருந்தன. இந்தியாவின் வடமேற்கே இருந்த சிந்துவெளி நாகரிக மக்களும் [கி.மு 2800-2600], பின்னர் வெண்கலக் காலத்திலும் சீனாவில் கி. மு. 2000-1500 காலப்பகுதிகளிலும், பழம் உரோமானியப் பண்பாட்டிலும் தெறிகள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. துணியாடைகளில் தற்கால பயன்பாடு போன்ற புழக்கம் டாய்ட்சு லாந்தில் கி.பி. 13 ஆவது நூற்றாண்டில் துவங்கியது. இது பின்னர் இறுக்கமாக ஆடை அணியும் பழக்கத்தில் விரைந்து ஐரோப்பாவில் பரவியது.

உங்களுக்கு நான் சொல்லி தெரியவேண்டய தேவையிருக்காது என்று நம்புகிறேன். [பொத்தான் தமிழ் பெயர்] ஆடை அணியாத மக்களுக்கு ஏன் பொத்தான் ஏன் தேவைப்பட்டது.

தமிழர்களின் ஆடைகளை பற்றி இலக்கியத்தில் உள்ள பாடல்கள் எடுத்து கூறுகின்றன.

இதை வாசித்தபின் முஸ்லிம்ங்கள் தான் உடல் முழுவது ஆடைகளை அணியும் பழக்கத்தை அறிமுகப் படுத்தினார்கள் என்று கூற மாட்டீர்கள்.

சங்க கால மக்களின் ஆடைகளும் ஆடை உடுத்தும் முறைகளும் பற்றிய தகவல்கள்.

குழந்தைகள் ஆடைகள்.

தமிழ் இலக்கியங்களில் பெரியோர்கள் அணியும் ஆடைகள் பற்றிய சில குறிப்புகள் காணப்படுகின்றன. ஆனால், குழந்தைகள் அணியும் ஆடைகள் பற்றிய குறிப்புகள் கிடைக்கப்பெறவில்லை. இருப்பினும், குழந்தைகளின் ஆடைகளை ஓரளவிற்கு அறிந்து கொள்ளக்கூடிய இலக்கியக் குறிப்புகள் காணப்படுகின்றன.

ஆடை உடுத்தத் தெரியாத மகனை அழைத்து, அவன் இடையில் துணிகள் கழன்று விழாத வகையில் இறுக்கக்கட்டிப் போருக்கு அனுப்பும் அன்னையைப் புறநானூற்றில் காண முடிகிறது. (புறம் 299)

இதிலிருந்து சிறுவர்களின் உடை இடையில் அணிவித்த தன்மை புலப்படுகிறது.

“செவ்வாய்க் குதலை மெய்பெறா மழலை

சிந்துபு சின்னீர் ஐம்படை நனைப்ப

அற்றம் காவாச் சுற்றுடைப் பூந்துகில்

தொடுத்தமணிக் கோவை உடுப்பொடு துயல்வரத்

தளர்நடை தாங்காக் கிளர்பூண் புதல்வரைப”(மணிமேலை. 3-140)

இப்பாடலில் குழந்தையின் அறியாமை உணர்வும், அதன் அப்பழுக்கற்ற வெள்ளை மனமும், அறைகுறையாக ஆடை அணிந்திருக்கும் அழகும் சுவைபட குறிப்பிட்டுள்ளதை அறியலாம்.

ஆடவர் ஆடைகள்

ஆண்களின் உடைகளை அரசர், வீரர், துறவியர், ஏழைகள்என பல நிலைகளில் குறிப்பிடலாம்.

அரசர் ஆடைகள்

ஒவ்வொரு இலக்கியமும் ஒவ்வொரு வகையான ஆடைகளை அரசன் அணிந்துள்ளதாகப் பதிவு செய்துள்ளன. அவ்வகையில் சங்க இலக்கியங்கள் கலிங்கம், படாம், துகில், அறுவை, கச்சு என்று அரசனின் ஆடைகளாகக் குறிப்பிடுகின்றன.

அரசனின் ஆடைகளை துகில், கச்சை, வடகம், மீக்கோள்என்று பெருங்கதை குறிப்பிடுகிறது. துகில், வெண்பட்டு, வட்டுடை, பட்டு, உரோமப்பட்டு என்று சிந்தாமணி குறிப்பிடுகின்றது. ஆக, ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு விதமாக ஆடைகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதை அறிய முடிகிறது.

சங்க காலத்தில் அரசன் நிலத்தில்படும் அளவிற்கு ஆடைகளை அணிந்திருந்தான். அவ்வாறு அணிவதில் அவனுக்கு ஏதோ ஒருவகையில் பெருமிதத்தினை ஏற்படுத்திருக்க வேண்டும் என்று உ. வே. சாகுறிப்பிடுகின்றார். இதனை மெய்ப்பிக்கும் விதமாக

“இருநிலந் தோயும் விரிநூல் அறுவை” (பதிற்றுப்பத்து 34-3)

என்றும்

“மருங்கிற் கட்டிய நிலனேர்பு துகிலினன்” (திருமுருகு 214)

என்ற அடிகள் விளங்குகின்றன.

அரசன் மேலாடையாக துகிலினை அணிந்துள்ளான். அது மட்டுமல்லாமல் தரையில் விழும் ஆடையினைத் தன் இடக்கையில் தாங்கிப் பிடித்துக் கொண்டு இருந்துள்ளான் என்பதை,

“புடைவீழ் அந்துகில் இடவயின் தழீஇ” (நெடுநல்வாடை 181)

என்று நெடுநல்வாடை குறிப்பிடுகிறது.

இந்நிலையில் இன்று மாற்றம் பெற்று காணப்படுகிறது. ஆண்கள் வேட்டி, சட்டை, துண்டு அணியும் போது துண்டினைத் தோளின் இடப்பக்கத்தில் போட்டுக் கொள்கின்றனர். இது அக்காலத்திலிருந்த பாரம்பரியத்தின் எச்சமாக இருக்கலாம். மன்னன் தன் இடைத்துணியை கையில் தாங்கியோ தோளின் இடப்பக்கத்தில் போட்டுக் கொண்டோ சென்றது போல் எளிய மக்கள் துண்டினை அவ்வாறு பயன்படுத்தியிருக்கலாம்.

போர்வீரர்கள் ஆடைகள்

போர் வீரர்களின் பொதுவான ஆடைகளாக கச்சை, கவசம் போன்றவை இருந்துள்ளன என்பதைச் சங்க இலக்கியங்கள் வழி அறியலாம்.

“நுண்வினைக் கச்சை தயக்கரக்கட்டி” (குறிஞ்சிப்பாட்டு 125)

கவசம் என்பது போர் வீரர்களின் முழு உடலினையும் மறைக்கும் அளவிற்கு அணியக்கூடிய பாதுகாப்பு உடையாகும். மேலும், உடலின் சில பாகங்களுக்கென்று தனித்துவமான கவச ஆடைகளையும் வீரர்கள் பயன்படுத்தியுள்ளனர். இதனை, “மெய்புகு கவசம்” என்று சிலம்பும், “காலாசொடு அறை எறிந்து” என்பது சீவகசிந்தாமணியும் குறிப்பிடுகிறன. மெய்க்காப்பாளர்களின் ஆடைகளைக் கஞ்சுகம் என்றும், அவ்வாடையை அணியும் போர் வீரர்களைக் கஞ்சுக மாக்கள் என்றும் அழைக்கப்படுவது அக்கால வழக்கமாக இருந்துள்ளது. இதனை,

“மின்னுடை வேத்திதிரக் கையர் மெய்புகத்

துன்னிடு கஞ்சுகத்துகிலர்”

என்ற கம்பராமாயணப் பாடல் வழி அறியலாம்.

முனிவர் மற்றும் துறவியர் ஆடைகள்

சங்க இலக்கியங்கள் முதற்கொண்டு முனிவர்கள் மரஉரிதரித்தவர்களாகவே குறிப்பிடப்படுகின்றனர். மான் மற்றும் புலித் தோல்களை ஆடைகளாக அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். இதனை, திருமுருகாற்றுப்படை

“மானின் உரிவை தைஇய மார்பினர்”

என்று குறிப்பிடுகிறது.

உலக வாழ்வை விரும்பாத துறவிகள் உடுத்தும் ஆடைகள் பற்றிக் குறிப்பிடும் போது, இவர்கள் காவி நிற ஆடைகளையே உடுத்தியுள்ளனர். சில துறவிகள் வெண்ணிற ஆடைகளையும் அணிந்திருந்தனர். பௌத்தத் துறவிகளும் காவி நிற ஆடைகளையே அணிந்திருந்தனர் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

பொதுமக்கள் ஆடைகள்

உயர்நிலை மக்கள், தாழ்நிலை மக்கள் என இவர்களை இருவகையாகப் பகுக்கலாம். உயர் நிலை மக்கள் என்று பார்க்கும் போது, ஐந்நிலத் தலைவன், செல்வந்தர், அரசனைச் சார்ந்த மக்கள் ஆகியோரைக் குறிப்பிடலாம்.

தாழ்நிலை மக்களாக மறவர், வேட்டுவர் மற்றும் குற்றேவல் செய்வர் போன்ற விளிம்பு நிலை மக்களைக் குறிப்பிடலாம்.

உயர்நிலை மக்கள் ஆடைகள்

இவர்களின் ஆடைகளாக கலிங்கம், காழகம், கூறை, மெய்ப்பை, போர்வை, உத்தரீயம் போன்றவைக் குறிப்பிடப்படுகின்றன. அந்தணர்கள் காலக உடையினைஅணிந்திருந்தனர். வணிகர்கள், அரசர்களைப் போன்று நிலந்தோயும் அளவிற்குக் கலிங்ம் உடுத்தியிருந்தனர். சிலப்பதிகாரம் பெருநிதிக் கிழவனின் மகனான கோவலன் தான் அணிந்திருக்கும் ஆடையைக் கூறை என்று குறிப்பிடுகின்றான்.

சிலம்பு காட்டும் பொற்கொல்லன் மெய்ப்பையுடன் விளங்குகிறான். இவற்றை இளங்கோவடிகள் பதிவு செய்துள்ளார். பெருங்கதையில் கணக்கர்கள் மற்றும் திணைத் தொழிலாளர்கள் போர்வை என்னும் ஒருவகை ஆடைகளை அணிந்திருந்தனர் என்பதை,

“புறங்காற் தாழ்ந்து போர்வை முற்றி

நிலந்தோய் புடுத்தநெடு நூண்ணாடையர்” (பெருங்கதை)

என்ற அடிகளின் மூலம் அறியலாம்.

தாழ்நிலை மக்கள் ஆடைகள்

தாழ்நிலை மக்களான எளிய மக்களின் ஆடைகள் பற்றி குறிப்பும் இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள. சங்க இலக்கியங்கள் குறவரின் உடைகளை மறனார் உடுக்கை என்று பதிவு செய்துள்ளன. சிந்தாமணி இவ்வாடயை வேட்டுவரின் உடையாக பதிவு செய்துள்ளது. இடையர்களின் உடைகளாக மாசுனுடுக்கையினையும் கருந்துவராடையையும் குறிப்பிடுகின்றது. எயினர்களும், கள்வர்களும் செந்துவராடையையும் நீலக்காச்சாடையையும் அணிந்திருந்தனர் என்று சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.

மகளிர் ஆடைகள்

ஆண்கள் ஆடைகள் போன்று பெண்களும் பல விதமான ஆடைகளை அணிந்திருந்தனர் அவ்வகையில் உயர்நிலையிலிருந்த அரசியர்களின் ஆடைகளாக பூந்துகில், கலிங்கம், கோடி நுண்துகில் போன்ற ஆடைகள் குறிப்பிடப்படுகின்றன. அரசனைப் போல் அவன் மனைவியரும் ஆடைகளை நிலம் தோயும் அளவிற்கு உடுத்தியிருந்தனர். கச்சும் மேலாடையும் அணிந்திருந்தனர் என்பதை

“கோடி நுண்டுகிலை கொய்து கொண்டுடீஇயதாகப்”

என்ற பெருங்கதை அடியின் மூலம் அறியலாம்.

மேலும், மகளிர்கள் தைக்காத துணியினை உடலில் போர்த்தி வந்ததாக குறிப்புகள் காணப்படுகிறன. இதனை,

“கதிர் நிழந் கவாப் பதுமநிறங் கடுக்கும்

புதுநூற் பூந்துகிலிருமடியுடீஇ” (பெருங்கதை)

என்ற அடிகளின் மூலம் அறியலாம்.

தாழ்நிலை மகளிர்

தாழ்நிலை மகளிரின் உடைகளாக துகில், கலிங்கம், கச்சை, தழையாடை, வம்பு ஆகிய ஆடை வகைகள் குறிப்பிடப்படுகின்றன. இவர்கள் உயர்நிலைப் பெண்களைப் போலவே ஆடை அணியும் முறைகளைக் கொண்டிருந்தனர் என்பதைச் சங்க இலக்கியங்கள் எடுத்தியம்புகின்றன.

ஆடைக் குறைப்பு அல்லது துறப்பது என்பதுதான் சுதந்திரம் என்று கருதுகிறீர்களா? ஆண்கள் முழுக்கை சட்டை, முழு மேலாடை அணிந்தால் அதை தொழில் நெறிஞர் [புரொஃபஷனல்] என்று உயர்த்தும் சமுதாயத்தில், பெண்கள் விடையத்தில் மட்டும் ஆடையைக் குறைப்பதுதான் சுதந்திரம் என்று சொல்லப்படுகிறது. காரணம் பெண்களையும், பெண்களின் உடலையும் வியாபார, விளம்பரக் காட்சிப்பொருளாக இந்த உலகம் மாற்றுகிறது. இது அடிமைத்தனம் என்று பெண்களுக்கும் புரிவதில்லை.

ஒரு ஆண் நாகரிகம் என்ற பெயரில் பெண்கள் போல கவர்ச்சியாக உடை உடுத்தி உறுப்புகள் தெரிகிற மாதிரி தெருக்களில் திரிவது இல்லை ஒருசிலர் இருக்கலாம் ஆனால் விதிவிலக்குகள் எல்லாம் விதியாக மாறாது.

நான் பெண்களை குறை கூறுவதற்கு இந்த விடையை எழுதவில்லை. எமது வாழ்வில் கட்டுப்பாடுகள் முதன்மையானது. ஒரு தெருவில் மகிழுந்தில் செல்லும் போது பல தெருவிளக்குகளின் சமிக்கைகள் எம்மைக் கட்டுப்படுத்தும். இதில் என் மகிழுந்து, நான் வரிகட்டுகிறேன், என் சுகந்திரம் என்று சொல்லி தெருவிளக்கின் சமிக்கைக்கு மதிப்பளிக்காமல் பயணித்தால் பேரிடரில் சிக்கும் நிலை ஏற்படும். அதை மதித்து சென்றால் பெரும் இழப்பை தவிர்க்க முடியும். இவ்வாறு எம் வாழ்வை செழுமைப்படுத்த வாழ்வில் பல கட்டுப்பாடுகள் உள்ளன இதை நாம் மதித்தல் வேண்டும்.

பதிவு: தமிழ் மறவன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.