இதுதான் உண்மையான நம் பாரம்பரிய சத்தான சத்து மாவு..சத்து மாவு இது மிகவும் ஆரோக்கியமான ஒன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்

0 1,201

இதுதான் உண்மையான நம் பாரம்பரிய சத்தான சத்து மாவு..சத்து மாவு இது மிகவும் ஆரோக்கியமான ஒன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்

இதில் நவதானியங்கள் அனைத்தும் இருப்பதால் மிகவும் சுவையாக இருக்கும். டீ, காபிக்குப் பதில் காலையும் மாலையும் அருந்தி வந்தால் வயிற்றில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.

உடல் வலிமையும் உடலுக்குத் தெம்பூட்டும் இன்னும் எத்தனையோ நன்மைகள் உண்டு அதை நீங்கள் அருந்துவதன் மூலம் அனுபவப்பூர்வமாக உணர்வீர்கள்.

சேர்த்துள்ள பொருட்கள்:

முளை கட்டியபொருட்கள்

1.ராகி
2.சோளம்
3.நாட்டு கம்பு
4.பாசிப்பயறு
5.மக்கா சோளம்
6.சிகப்பு கொள்ளு
7.கருப்பு கொள்ளு
8.கருப்பு சோயா
9.வெள்ளை சோயா
10.கருப்பு கொண்டை கடலை
11.கருப்பு உளுந்து
12.சம்பா கோதுமை
13.நிலக்கடலை
14.தழனி கொட்டை
15.நாட்டு துவரை

முளை கட்டாத பொருட்கள்

16.அவல்
17.ஜவ்வரிசி
18.வெள்ளை எள்
19.கசகசா
20.பொட்டுக்கடலை

நட்ஸ் வகைகள்

21.பிஸ்தா
22.முந்திரி
23.சாரப்பருப்பு
24.பாதாம்

வாசனை பொருட்கள்

25.ஓமம்
26.சுக்கு
27.ஏலம்

பாரம்பரிய அரிசி வகைகள்

28.மாப்பிள்ளை சம்பா
29.கருப்பு அரிசி
30.சிகப்பு அரிசி
31.மூங்கில் அரிசி
32.தினை
33.வரகு
34.குதிரை வாலி
35.சாமை
36.பார்லி

மூலிகை பொருட்கள்

37.ஜாதிக்காய்
38.மாசிக்காய்
39.அமுக்கிரா கிழங்கு
40.சிவப்பு ராஜ்மா

40 வகையான தானியங்களை முளை கட்டி அரைத்த தரமான சத்துமாவு கிடைக்கும்

சத்துபானம் தயாரிக்கும் முறை

தேவையான பொருட்கள்

சத்துமாவு – 2 ஸ்பூன்

பால் – 2 டம்ளர்

தண்ணீர் – 2 டம்ளர்

நாட்டு சக்கரை அல்லது பனஞ் சக்கரை அல்லது உப்பு மிளகு– தேவைக்கு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சத்துமாவையும் சேர்த்து கட்டி படாமல் நன்கு கரைக்கவும்.

கரைத்த இந்த கலவையை அடுப்பில் வைத்து கட்டியாகாமல் நன்கு கலக்கவும்.

சிறிது நேரத்தில் காய வைத்த பாலை ஊற்றி நன்கு கலக்கி அதனுடன் இனிப்பு சேர்த்து கலக்கி இறக்கவும்.

அவ்வளவு தான் சுவையான ஆரோக்கியமான சத்துமாவு பானம் தயார்

அதில் அவரவர் விருப்பப்படி இனிப்பு அல்லது உப்பு அல்லது உப்பு, மிளகுபொடி சேர்த்து பருகலாம்.

எதுவும் கலக்காமல் அப்படியேகூட குடிக்கலாம்.

குறிப்பு

6 மாதம் கெடாது.

1.சத்து மாவு காய வைத்து, வறுத்து அரைக்கப்படுவதால் 6 மாதம் வரை கெடாது.

2.பொதுவாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 50 கிராம் வரை பயன்படுத்தினால் ஒரு கிலோ பாக்கெட் 20 நாளில் தீர்ந்து விடும். இதனால், கெட்டு விடுமோ என்ற கவலையும் தேவையில்லை.

1. 6மாத குழந்தை முதல் வயதான பெரியவர்கள் வரை அனைவரும் பயன் படுத்தலாம்

2.காலையில் அவசரமாக வேலைக்கு போகிறவர்கள் கண்டிப்பாக குடியுங்கள்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.