“இங்கே மனித சாவுகள் மட்டுமே தலைப்புச் செய்திகளாகிறது” நேற்றைய ஒருநாளில் மட்டுமே நடந்த சாலை விபத்துகளில்

0 359

ப்ளீஸ் கொஞ்சம் மெதுவா போங்க!….

நேற்றைய ஒருநாளில் மட்டுமே நடந்த சாலை விபத்துகளில் இந்த இறப்புகள்.இந்தப் படங்கள் தவிர வாலில்லாத கால் கைகளற்ற குரங்குகளை நாங்கள் கண்டது ஏராளம்.அதில் சில படங்கள் நண்பரிடமிருந்து வரவில்லை.பிறகு பதிவேற்றுகிறேன்.இவைகள் நான் நேற்று பயணப்பட்ட நீலகிரி மலையின் வழியாக செல்லும் மிக குறைந்த தூரமுள்ள பாதையில் வெகு குறைவான பகுதிகளில் மட்டுமே கண்டது.மொத்த மேற்கு தொடர்ச்சி மலை முழுவதுமாக உள்ள பாதைகள் மற்றும் நாடு முழுவதுமாக உள்ள பாதைகளில் நடந்த சாலை விபத்துகள் மூலம் நடந்த சாவுகள் எவ்வளவு நடந்திருக்கும் என கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்…

“இங்கே மனித சாவுகள் மட்டுமே தலைப்புச் செய்திகளாகிறது”
நியாயமாரே….
அவைகளுக்கும் நம்மைப்போலவே உயிருண்டு…
அவைகளுக்கும் இந்த பூமி சொந்தம்….
அவைகளுக்கு சாலைவிதிகளோ மற்ற எல்லைகளோ தெரியாது….
நம்மைவிட அவைகளுக்கே இந்த பூமியில் மிகுந்த உரிமையுண்டு…

“மனிதர்களின்றி மற்ற உயிரினங்களால் இந்த பூமியில் சுகமாக வாழ்ந்திட முடியும். ஆனால் மற்ற உயிரினங்களின்றி மனிதர்களால் ஒரு நாள்கூட இந்த பூமியில் வாழ்ந்திடமுடியாது என்பதை ஆழமாக மனதில் நிறுத்துவோம்”….

சாலையோர விலங்குகள் மீது
தயவுசெய்து இரக்கப்படாதீர்கள்…
அவைகளுக்கு எந்த உணவையும் கொடுக்காதீர்கள்…
அப்படி இரக்கபடுவதாக இருந்தால் மனிதர்கள் மீது இரக்கப் படுங்கள்,
மனிதனுக்கு மட்டும்தான் தமது உணவை தாமே தேடிக்கொள்ள முடியாதபடி இந்த சமூகம் மாற்றி வைத்திருக்கிறது….

விலங்குகளுக்கு உணவளிப்பது அவற்றின் வாழ்வை குலைத்துவிடும்,இயல்பை மாற்றிவிடும் என்பதைவிட,
வனவிலங்குகளுக்கு உணவு கொடுப்பது,
” சட்டப்படி குற்றம் ”

உயிரினங்களின் தயவில் வாழ்வோம்….சூழலியல் தேடலுடன்,
Ramamurthi Ram

You might also like

Leave A Reply

Your email address will not be published.