அதை அகற்ற அங்கு இருக்கும் அக்காக்கள் செய்யும் வேலையை பார்த்தால் கண்களில் தண்ணீர் வந்து விடும்.

0 438

கேள்வி:

படித்த முட்டாள்” என்று யாரையாவது நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா? அந்த அனுபவத்தை பகிருங்கள்?

பதில்:

நான் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கின்றேன். நீங்கள் கேட்டுள்ள படித்த முட்டாள்களை நான் என் அலுவலகத்தில் அதிகமாக காண்பேன். அதில் முக்கியமான இரண்டு முட்டாள்கள் பற்றி நான் எழுத விரும்புகிறேன்.

  • நான் வேலை செய்யும் அறை(ODC) பாதுகாப்பானது. யாரும் அவ்வளவு சீக்கிரம் உள்ளே வந்துவிட முடியாது. உள்ளே வந்தவர்கள் வெளியே போக வேண்டும் என்றால் ஒவ்வொரு முறையும் கையெழுத்து இட்டு தான் வெளியே செல்ல வேண்டும். அதனால் தான் எங்கள் அறைக்கு உள்ளே கழிவறை உண்டு. Bubble gum மென்னும் அதிமேதாவிகள் அதை Urinal Basin இல் துப்பி வைப்பார்கள். தினமும் எங்கள் அறையில் உள்ள கழிவறையை சுத்தம் செய்யும் நபர் அதை சுத்தம் செய்யும் போது பாவமாக இருக்கும். படித்த முட்டாள்கள் நம் அறையில் அதிகம் என்று நினைத்து கொள்வேன்.

மதிய சாப்பாடு நான் பெரும்பாலும் 2:00 – 2:30 க்கு தான் சாப்பிடுவேன். ஏன் என்றால் அப்போது தான் உட்கார இடம் கிடைக்கும். பெரிய நிறுவனங்களில் வேலை செய்வதில் இருக்கும் மாபெரும் சிரமங்களில் ஒன்று மதிய உணவுக்கு உட்கார இடம் தேடுவது. இதனால் தான் தாமதமாக உணவு உன்ன செல்வேன். உணவு உண்ட பின்பு கை கழுவும் இடம் சென்றால் அங்கு, தெப்பக்குளம் போல தேங்கி இருக்கும். மனசாட்சியே இல்லாமல் படித்த முட்டாள்கள், தின்ன பின்பு பாத்திரங்களை சுத்தம் செய்கின்றேன் என்ற பெயரில் எல்லா வற்றையும் கொட்டி Wash Basinஐ தெப்பக்குளம் போல செய்து விடுவார்கள். அதை அகற்ற அங்கு இருக்கும் அக்காக்கள் செய்யும் வேலையை பார்த்தால் கண்களில் தண்ணீர் வந்து விடும். மனசாட்சியே இல்லாமல் படித்த முட்டாள்கள் செய்யும் வேலை தான் இது.

இது போல தான் நீங்களும் செய்வீர்கள் என்றால், தயவு செய்து செய்யாதீர்கள். அவர்களும் மனிதர்கள் தான்.

நன்றி: பிரவீன்குமார் ராஜேந்திரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.