இயற்கை விவசாயம்

தமிழ்நாட்டின் மண் வகைகளும் அதன் தன்மைகளும்..!

By பாரதி

January 31, 2018

மண்வளம்

மண் என்பது உலகின் இயற்கை ஆதாரங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வளமாகும். ஒரு அங்குல மண் உருவாதற்கு 300-1000 வருட காலம் தேவைப்படுகிறது. ஒரு செடி செழுமையுடன் வளர்ந்து அதிக மகசூல் தர வேண்டுமானால் அதற்கு ஏழு அடிப்படைத் தேவைகள் உள்ளன. அவை 1.சூரிய ஒளி 2.கரியமில வாயு 3.ஆக்ஸிஜன் 4.தண்ணீர் 5.தாது உப்புகள் 6.மண் பிடிமானம் மற்றும் 7.மண்வெப்பம் இதில் முதல் மூன்றும் சூரிய மூலமும், காற்று மூலமும் பயிருக்கு கிடைத்துவிடுகிறது. மற்றைய ஐந்து தேவைகளும் மண்ணிலிருந்து தான் பெற்றாக வேண்டும். அதிகபடியான மழை, காற்று மற்றும் வெப்பம் ஆகிய தாக்குதல்களால் மண்ணிலுள்ள தாதுக்கள் நீக்கப்பட்டு மண் குறைவு ஏற்படுகிறது. எனவே மண் வள மேலாண்மை அதிக மகசூல் பெறவும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.

தமிழ்நாட்டின் மண் பிரிவுகள்

1. செம்மண் (65 சதவீதம்) 2. கரிசல் மண் (12 சதவீதம்) 3. செம்பொறை மண் (3 சதவீதம்) 4. கடற்கரை மண் (7 சதவீதம்) செம்மண் வகைகள்

1. இரு பொறை செம்மண் (30 சதவீதம்) 2. வளம் குறைந்த செம்மண் (6 சதவீதம்) 3. மணற்பாங்கான செம்மண் (6 சதவீதம்) 4. ஆழம் குறைந்த செம்மண் (2 சதவீதம்) 5. ஆழமான இருபொறை செம்மண் (8 சதவீதம்)

 

வளமான மண்ணின் தன்மைகள்

  • செடியின் வளர்ச்சிக்கு தேவைப்படும் அடிப்படை ஊட்டச்சத்துக்களான தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துக்கள் செடிக்கு கிடைக்கும் நிலையில் அமைந்துள்ள மண் “வளமான மண்”
  • வளமான மண், போரான், கினோசின், கோபால்ட், செம்பு, இரும்புச்சத்து, மாங்கனிஸ், மெக்னிஸியம், மாலிப்பிடினம், கந்தகம் மற்றும் துத்தநாக தாதுக்கள் போதுமான அளவில் கிடைக்ககூடிய நிலையில் அமைந்திருக்கும்
  • வளமான மண்ணில் அங்ககப் பொருள் இருப்பதனால் மண்ணின் அமைப்பு மேம்படுவதுடன், ஈர பதத்தையும் தக்க வைத்துக் கொள்கிறது.
  • மண்ணின் கார் அமில தன்மை 6.0 முதல் 6.8 வரை இருப்பின் அவை வளமான மண்ணாகும்
  • மண் சரியான மண் அமைப்புடன் நன்கு வடியக் கூடிய நிலையில்  அமைந்துள்ள மண் “வளமான மண்”
  • வளமான மண்ணில் பயிர் வளர்ச்சிக்கு நன்மை செய்யும் பல்வேறு நுண்ணுயயிர்கள் காணப்படும்
  • வளமான மண் ஆழமான மண் அமைப்புடன் இருக்கும

தமிழ்நாட்டின் வேளாண் தட்ப வெப்ப மண்டலத்தின் மண் வகைகள்

மண்டலம் மாவட்டம் மண் வகைகள்
வடகிழக்கு மண்டலம் காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், வேலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மணற்பாங்கான செம்மண், களிமண் பாங்கான மண், உவர் தன்மை கடலோர வண்டல் மண், இருபொறை மண்
வடமேற்கு மண்டலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் நாமக்கல் (பகுதி்) சுண்ணாம்புத்தன்மையுள்ள செம்மண்
சுண்ணாம்புத்தன்மையுள்ள கரிசல்மண்
மேற்கு மண்டலம் ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, கரூர் (பகுதி), நாமக்கல் (பகுதி), திண்டுக்கல், பெரம்பலூர், அரியலூர் (பகுதி) இருபொறை செம்மண், கரிசல் மண்
காவேரி படுகை மண் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி மற்றும் கரூர், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர் பகுதிகள் இருபொறை செம்மண், வண்டல் மண்
தெற்கு மண்டலம் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி கடலோ வண்டல் மண், கரிசல் மண், ஆழமான செம்மண், மணற்பாங்கான செம்மண்
அருக மழை மண்டலம் கன்னியாகுமரி கடலோர உவர்தன்மையுள்ள வண்டல்மண், ஆழமான இருபொறை மண்
மலைத்தொடர் மண்டலம் நீலகிரி மற்றும் கொடைக்கானல் (திண்டுக்கல்) செம்பொறை மண்