பாரம்பரியம்

நீர்த்துப்போன உயிரணுவை கெட்டிப்படுத்தவும் ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கையை தூண்டவும்..!

By பாரதி

May 21, 2018

பண்டைய காலத்தில் பல திருமணம் செய்யும் மன்னர்களுக்கு ஜாதிக்காயை உணவாக வழங்குவது அரண்மனையின் வழக்கமாம்..!

ஜாதிக்காய் உடலில் தன்னெழுச்சி உணர்வுகளையும், உயிரணு உற்பத்தியையும் அதிகரிக்கும் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்? இப்பட்டிப்பட்ட ஒரு மூலிகைப் பொருள் நம் மண்ணில் செழித்து செழித்து விளைகிறதென்றால் நம்ப முடிகிறதா?

வாருங்கள் தொடர்ந்து இந்த சாதிக்காயின் மகத்துவங்கள் குறித்து பார்க்கலாம்.

ஜாதிக்காயில் எளிதில் ஆவியாகும் எண்ணெய் வகைகள் 15% உள்ளது. ஆல்ஃபா ஃபெனைன், பீட்டா ஃபெனைன், மிர்ட்டிசின், எலின்சின் போன்ற எண்ணெய்கள் இருகின்றன. இந்த வேதிப்பொருட்களில் வீரிய சக்திகள் நிறைந்துள்ளன.ஜாதிக்காய் என்பது மன அழுத்தத்தை போக்கி, உணர்சிகளை தூண்டும் வல்லமை கொண்டது.

ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கையை தூண்டவும் வல்லது.ஆண்மைக்குறைவு, மலட்டு, நரம்பு தளர்ச்சி போன்ற குறைகளை துரத்தும் திறன் கொண்டது இந்த ஜாதிக்காய்.

நீர்த்துப்போன உயிரணுவை கெட்டிப்படுத்தவும் இந்த ஜாதிக்காய் உதவுகிறது

எப்படி சாப்பிட வேண்டும்?

ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு அதை இடித்து பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த பொடியை பசும்பாலில் கலந்து காய்ச்சி குடிக்க வேண்டும்.இதை காலையும் மாலையும் தொடர்ந்து குடித்து வந்தால் சில நாட்களில் பலன் கொட்டோ கொட்டென கொட்டும்.

ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகத்தழகு அதிகரிக்கும்