பறவைகளை வேடிக்கை பார்க்கச் சென்ற பிரித்தானியருக்கு அடித்த அதிர்ஷ்டம்: கிடைத்த புதையலின் மதிப்பைக் கேட்டால் அசந்துபோவீர்கள்!

0 189

பிரித்தானியாவில் பறவைகளை வேடிக்கை பார்க்கச் சென்ற ஒருவருக்கு புதையல் பானை ஒன்று கிடைத்துள்ளது.மெட்டல் டிடெக்டர் மூலம் பூமிக்கடியில் கிடக்கும் உலோகப்பொருட்களை தேடி எடுக்கும் வழக்கம் கொண்ட அந்த 50 வயது பிரித்தானியருக்கு பறவைகள் என்றால் கொள்ளைப்பிரியம்.அப்படி அவர் பறவைகள் சண்டை போடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்போது, புதிதாக உழப்பட்ட வயல் ஒன்றில் ஏதோ ஒரு பளிச்சிடும் பொருள் கிடப்பதைக் கண்டுள்ளார்.என்னவோ என்று அதை எடுத்து தடவிப் பார்த்தவருக்கு, அவர் ஏற்கனவே மெட்டல் டிடெக்டர் மூலம் பூமிக்கடியில் கிடக்கும் உலோகப்பொருட்களை தேடி எடுக்கும் வழக்கம் கொண்டவர் என்பதால், சட்டென அது ஒரு தங்க நாணயம் என்பது தெரியவந்திருக்கிறது.

உடனே வீட்டுக்குப் போய் தனது மெட்டல் டிடெக்டர், இரண்டு பெரிய பைகள், ஒரு மண்வெட்டி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அதே வயலுக்கு திரும்பியிருக்கிறார் அவர்.ஓரிடத்தில் அவரது மெட்டல் டிடெக்டர் பலத்த ஒலி எழுப்ப, மண்ணை அகற்றிப் பார்த்தால் ஒரு வளையல் போல ஏதோ இருந்துள்ளது.

வளையலை எடுக்கப்பார்த்தால், அது வளையல் அல்ல, ஒரு பானையின் வாய்! பானையை பத்திரமாக எடுத்த அவர், அதற்குள் பார்த்தபோது ஏற்பட்ட அதிர்ச்சியில் கொஞ்ச நேரம் அப்படியே உட்கார்ந்துவிட்டாராம். காரணம், அதற்குள் 1,300 தங்க நணயங்கள் இருந்துள்ளன.

அவை கி.பி 40க்கும் 50க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த, ரோமானியர்களை எதிர்த்து போரிட்ட புரட்சிப்பெண்ணான Boudicca என்பவருக்கு சொந்தமானவையாக இருக்கும் என கருதப்படுகிறது.ஒரு நாணயத்தின் மதிப்பு 650 பவுண்டுகள், ஆக மொத்தம் 1,300 நாணயங்களின் மதிப்பைப் பார்த்தால்,

அது சுமார் 800,000 பவுண்டுகள்! தனக்கு இவ்வளவு பெரிய புதையல் கிடைத்துள்ளது என்பதால், பாதுகாப்பு கருதியோ என்னவோ, அவர் தனது பெயரைக் கூட வெளியிடமறுத்துவிட்டாராம்.பறவைகளை வேடிக்கை பார்க்கப்போனவர், கடைசியில் பெரும் புதையலுக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார்!

You might also like

Leave A Reply

Your email address will not be published.