ஆனந்தமாக நடந்து முடிந்த இயக்குனர் பி வாசுவின் மகள் திருமணம்!!அட மணப்பெண் இந்த பிக் பாஸ் பிரபலத்தின் தங்கையா?ஷாக்கான ரசிகர்கள்!

0 240

எதிர்பாராத படி பிரபலங்கள் பலரின் திருமணமும் வெளியில் சொல்லிக் கொள்ளாமல் இந்த லாக்டவுனில் சிம்பிளாக நடந்து வரும் நிலையில் ௯௦ ஸ் வெற்றி பட இயக்குனர் பி வாசு என்கின்ற வாசுதேவன் பீதாம்பரன் மகளுக்கு திருமணம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த சுப காரியத்தில் நடிகர் பிரபு உட்பட பல பிரபலங்கள் பங்கேற்றிருந்த நிலையில் மணப்பெண்ணின் அண்ணனை கவனித்த ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.1955-ம் ஆண்டு சென்னையில் பிறந்த வாசுதேவன் அவர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய சினிமாவில் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடா ஹிந்தி என வெவ்வேறு மொழிகளில் படங்களை இயக்கி வெற்றிப்பட்டுள்ளார்.

சந்தன பாரதியிடம் துணை இயக்குனராக பயின்ற வாசு அவர்கள் 1986-ம் ஆண்டு கன்னடா மொழியில் தன் முதல் படத்தை இயக்கினார் அதன் பின் மலையாளத்திலும் டேபுட் செய்த வாசு 1988-ம் ஆண்டு பிரபு மற்றும் ருபிணி நடித்த “என் தங்கச்சி படிச்சவ” திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை பணக்காரன் நடிகன் சின்ன தம்பி கிழக்கு கரை ரிக்க்ஷா மாமா சேதுபதி ஐ பி எஸ் கூலி சந்திரமுகி உள்ளிட்ட திரைப்படங்கள் இவரது படைப்புகள். இயக்குனர் மட்டுமின்றி 25 ற்கு மேற்பட்ட படங்களை தயாரித்துள்ள வாசுதேவன் ஷாந்தி என்பவரை திருமணம் செய்து ஷக்தி என்ற மகனும் அபிராமி என்ற மகளும் உள்ளார்கள்.

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஏற்கனவே அறிமுகமான ஷக்தி தொட்டால் பூ மலரும், நினைத்தாலே இனிக்கும் போன்ற வெற்றிப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். அதுமட்டுமின்றி பிரபல சிந்தனை திரை நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் ௧ யில் பங்கேற்று மக்களின் கவனத்தையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. நடிகர் ஷக்திக்கு 2011-ம் ஆண்டு ஸ்ம்ரிதி என்பவருடன் திருமணம் முடிந்து சந்தோசமாக வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

சக்தியின் உடன் பிறந்த தங்கையும் பி வாசுவின் மகளுமான அபிராமிக்கு கலெக்டர் ராதாகிருஷ்னன் மகன் பொன் சுந்தர் என்பவருடன் கடந்த புதன் கிழமை காலை தனியார் ஹோட்டலில் சிறப்பாக நடந்து முடிந்தது. இதற்கு பிரபு குஷ்பூ உட்பட பல பிரபலங்களும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். அபிராமி போன் சுந்தர் தம்பதியினர் திருமண புகைப்படம் உங்கள் பார்வைக்காக!

You might also like

Leave A Reply

Your email address will not be published.