தெருவில் பரோட்டா கடை நடத்திய தமிழன்.! ஆண்டு வருமானம் மட்டும் எத்தனை கோடி தெரியுமா.? தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க.!

0 545

சென்னையில் தெருவில் பரோட்டா கடை நடத்தி வந்த சுரேஷ் சின்னச்சாமியின் தற்போதைய ஆண்டு வருமானம் ரூ.18 கோடி.ஆயிரக்கணக்கில் சம்பாதித்து வந்தவர் மிக எளிமையாக இந்த இலக்கை அடைந்துவிடவில்லை, கடினமான உழைப்பும், விடாமுயற்சியுமே சுரேஷின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம்.1980களில் சுரேஷ் சின்னச்சாமியின் தந்தை மெரினா, பெசன்ட்நகர் கடற்கரையில் உணவுக்கடை நடத்தி வந்தார்.இதுதவிர அடையாறில் சிறிய இடத்தை வாடகைக்கு எடுத்து மதிய உணவை விற்பனை செய்து வந்தார், இதனால் தினக்கூலி தொழிலாளர்களின் கூட்டம் அதிகரித்தது.சுரேசுக்கு 12 வயதாக இருக்கும் போது தந்தைக்கு உதவி செய்தார், மதியம் சத்துணவுடன் இலவசக் கல்வியையும் பயின்றார்.

இந்நிலையில் திண்டுக்கல்லுக்கு குடிபெயர்ந்த சுரேஷின் குடும்பம், விவசாயத்தில் ஈடுபட்டனர், போதிய லாபம் இல்லாததால் 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் சென்னைக்கு வந்தனர்.

இங்கு கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து மீண்டும் தொழிலை தொடங்கினார். இதில் சுரேஷின் படிப்பும் த டைபட்டது.

தந்தையின் கடையிலிருந்து சமார் 100 மீட்டர் தொலைவில் சுரேஷ் மற்றொரு கடையை தொடங்கினார்.தந்தையை விடவும் சுரேஷ்க்கு வருமானம் அதிகரித்தது, அப்படியே டுடோரியல் மூலம் 10 வகுப்பு பொதுத்தேர்வையும் எழுதி முடித்தார்.

37 சதவிகித தேர்ச்சியுடன் 12ம் வகுப்பு வரை படித்தார், அங்கு மாணவர்கள் புரோட்டாக்காரப் பையன் என கி ண்டலடித்தனர், ஆனால் எதையும் அவர் கண்டுகொள்ளவில்லை. தன் லட்சியம் மட்டுமே முக்கிய குறிக்கோளாக இருந்தது.

தொடர்ந்து ஜெயின் கல்லூரியில் பிஏ கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் டிப்ளமோ, தொலைதூரக் கல்வி மூலம் எம்பிஏ என தனது கல்வித் திறமையையும் வளர்த்துக் கொண்டார்.

அடுத்த முயற்சியாக கார்னிவல் பயணிகள் கப்பலில் பணிசெய்யும் வாய்ப்பை பெற்றார், அங்கிருந்து கொண்டே படிப்படியாக முன்னேறி சில ஆண்டுகளிலேயே லட்சக்கணக்கில் மாத வருமானமும் கிடைத்தது.

இதற்கிடையே 2008ம் ஆண்டு காதல் மனைவி திவ்யாவை கரம் பிடித்ததுடன், அவருக்கும் கப்பலிலேயே பணி செய்யும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.

இப்படியே சில வருடங்கள் உருண்டோட, 2013ம் ஆண்டு நல்ல வருமானத்துடன் சென்னைக்கு திரும்பினர்.2016ம் ஆண்டில் பெரம்பூரில் சொந்தமாக சங்கிலித் தொடர் ரெஸ்டாரண்டை தொடங்கினார்.

அடுத்த சில மாதங்களில் தஞ்சாவூர், விக்கிரவாண்டியில் மேலும் ஐந்து ரெஸ்டாரண்டுகளை தொடங்கினார்.2017- 18ம் ஆண்டு நிதி ஆண்டுகளில் இவருடைய ஆண்டு வருமானம் 18 கோடி ரூபாயாக அதிகரித்தது.

ஒவ்வொரு மாதமும், லாபத்தில் இருந்து 25 சதவிகிதத்தை ஊழியர்களுக்கு பிரித்துக் கொடுப்பாராம், இவை இன்னும் அதிகமாக லாபத்தை ஈட்டித் தருவதாக பெருமிதம் கொள்கிறார் சுரேஷ் சின்னச்சாமி.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.